பிகினி போட்டோ எல்லாமே ஃபேக் ஏஐ.. கடுப்பான காந்தாரா ஹீரோயின்.. ருக்மிணி வசந்த் எச்சரிக்கை
பெங்களூர்: ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்டத் திரைப்படமான 'டிராகன்' படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடிக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சியில், அவரது தோற்றமும் வசன உச்சரிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இதைத்தொடர்ந்து, இந்த 29 வயது பெங்களூரு நடிகை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.
திரையில் பெரும்பாலும் குடும்பப்பாங்கான, பாரம்பரிய உடைகளில் தோன்றி ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ருக்மிணி வசந்த், தற்போது எதிர்பாராத விதமாக மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் வெளிவந்துள்ளார். நீச்சல் குளம் ஒன்றின் அருகில், பச்சை நிற பிகினி அணிந்து, படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் அவர் இருக்கும் ஒரு வீடியோ வைரலானது. இந்நிலையில், அது முற்றிலும் மோசடி என்றும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக ருக்மிணி வசந்த் எச்சரித்துள்ளார்.

பிகினி வீடியோ மோசடி: சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வைகளையும் விருப்பங்களையும் பெற்று, காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ருக்மிணி வசந்த் தனது கேரியரில் இவ்வளவு துணிச்சலான பிகினி உடையில் தோன்றுவது இதுவே முதல்முறை என்பதால், நெட்டிசன்கள் இவ்வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில், அது முழுக்க முழுக்க ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ என நடிகை விளாசி உள்ளார்.
ரசிகர்கள் குழப்பம்: புடவையிலும், பாரம்பரியப் உடைகளிலும் பார்த்த தங்கப்பூவா இது என்றும் காந்தாரா 2 படத்திலேயே கவர்ச்சி ராணியாக நடித்திருந்தார். தற்போது, இவ்வளவு போல்டான தோற்றத்தில் பில்லா நயன்தாரா போல மாறிவிட்டாரே என ரசிகர்கள் வியப்படைந்தனர். இருப்பினும், இந்த வீடியோ குறித்து திரையுலக வட்டாரங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் கலவையான விவாதங்கள் நடந்து வந்தன. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பெருகியுள்ளதால், இது ஏஐ டீப்ஃபேக் வீடியோவாக இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்பிய நிலையில், தற்போது ருக்மிணி வசந்த் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
ருக்மிணி வசந்த் விளக்கம்: நானும் என்னுடைய டீமும் இப்படியொரு ஏஐ போட்டோக்கள் மற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம். அதில் இருப்பது நான் தான் என பலர் சொல்லி வரும் நிலையில், அது முழுக்க முழுக்க ஏஐ மூலம் சித்தரிக்கப்பட்ட வீடியோ. என்னுடைய லீகல் டீம் மூலம் இப்படியொரு மோசமான வேலையை பார்த்தவர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப் போகிறேன். இந்த ஏஐ போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை யாரும் பகிர வேண்டாம் என நடிகை ருக்மிணி வசந்த் எச்சரித்துள்ளார்.
நடிகைகளுக்கு பாதுகாப்பில்லை: ஏஐ தொழில்நுட்பம் உலகம் முழுவதும் பெருகி வரும் சூழலில் பல நடிகைகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஏஐ மூலம் உருவாக்கி சில விஷமிகள் பணம் பார்த்து வருகின்றனர். க்ரோக் உள்ளிட்ட ஏஐ செயலிகள் மூலம் நடிகைகளை பிகினியில் பார்க்க ஆசைப்பட்டு இப்படி மோசடிகளில் ஈடுபட்டு வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. அச்சு அசல் ஒரிஜினல் வீடியோ போலவே சமீபகாலமாக ஏஐ வீடியோக்கள் உருவாகி வருவது அதிகளவில் மோசடிகளை உண்டாக்கும் என்றும் ஏஐ மூலம் தத்ரூபமாக வீடியோக்களை உருவாக்குவது முற்றிலும் தவறு என்றும் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications