வக்கிரம் புடிச்சவங்க கையில ஏஐ.. மறக்க முடியாத தண்டனையை கொடுக்கணும்.. கொந்தளித்த ராஷ்மிகா

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே தனது முகத்தை வைத்து ஆபாசமான ஒரு லிப்ட் வீடியோ வைரலாகி வருவதை எதிர்த்து பதிவிட்டிருந்தார். அமிதாப் பச்சன் முதல் தேசிய அளவில் பல பிரபலங்களும் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக களமிறங்கினர். இந்நிலையில், மீண்டும் ஏஐ தொழில்நுட்பத்தை வைத்து இணையவாசிகள் அத்துமீறி வருவதாக சைபர் கிரைமை டேக் செய்து போஸ்ட் ஒன்றை சற்றுமுன் பதிவிட்டுள்ளார்.

கன்னட சினிமாவில் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கு திரையுலகில் விஜய் தேவரகொண்டாவின் கீதா கோவிந்தம் படத்துக்குப் பிறகு நேஷ்னல் கிரஷ்ஷாக மாறினார். புஷ்பா 2 படத்தில் அவர் வந்ததே ஃபீலிங்ஸ் என கவர்ச்சி பொங்க ஆட பாக்ஸ் ஆபீஸில் அந்த படம் பான் இந்தியா கலெக்‌ஷனை அள்ளியது.

AI is a force for progress but its misuse to create vulgarity and target women - Rashmika Mandanna

விஜய், சல்மான் கான், ரன்பீர் கபூர், விக்கி கவுஷல் என டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தூள் கிளப்பி வருகிறார். ஆனால், தொடர்ந்து ஏஐ மூலமாக உருவாக்கப்படும் டீப் ஃபேக் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் ராஷ்மிகாவுக்கு மிகப்பெரிய தொல்லையை கொடுத்து வருகிறது.

ஆபாச எடிட்கள்: நடிகைகளை சிலர் ஏஐ உதவியுடன் அழகாக காட்டினாலும், பலர் ஆபாசமாக ஆடைகளை குறைத்தும் நிர்வாணமாக மாற்றியும் எடிட் செய்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டு நோகடித்து வருகின்றனர். சில ஏஐ வீடியோக்கள் எல்லாம் அப்படியே நடிகைகளின் கசிந்த பிட்டு வீடியோ என்றே வைரலாகி அவர்களை கஷ்டப்படுத்தி வருகிறது.

ராஷ்மிகா மந்தனா எதிர்ப்பு: நடிகை ராஷ்மிகா மந்தனா ஆரம்பத்தில் இருந்தே ஏஐ எடிட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். கவர்ச்சி மாடல் மோசமான உடையுடன் இருக்கும் லிப்ட் வீடியோவில் தனது முகத்தை எடிட் செய்து வெளியிட்ட போதே அதற்கு எதிராக சைபர் புகார் கொடுத்து இருந்தார். இந்நிலையில், அவரை வைத்து சமீபத்தில், காக்டெயில் படத்தில் பிகினி உடையில் நடிக்கிறார் ராஷ்மிகா என ரூமர்கள் கிளம்பின. இந்நிலையில், திடீரென ஏஐ உருவாக்கங்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார்.

வக்கிர புத்தி கொண்டவர்கள்: ஏஐ ஒரு நல்ல வளர்ச்சி பாதைக்கான சாவியாக இருக்கலாம். ஆனால், வக்கிர புத்திக் கொண்டவர்கள் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான மோசமான ஆயுதமாக மாற்றி வருகின்றனர். வருங்காலத்தில் இணையத்தில் வரும் எந்தவொரு விஷயமும் உண்மையானதாக இருக்காது என்றும் ஜோடிக்கப்பட்ட ஃபேக் எடிட்டாகவே இருக்கும். இதனை சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்றும் தவறு செய்பவர்களுக்கு மறக்கவே முடியாத தண்டனையை கொடுக்க வேண்டும் என கொந்தளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X