ஐஸ்வர்யா ராய் கேட்கும் அபார சம்பளம்!

அவரும் சூழ்நிலையை சரியாகப் பயன்படுத்தி படத்துக்குப் படம் தனது சம்பளத்தை இரட்டிப்பாக்கி வருகிறார்.
எந்திரன் படத்தில் அவருக்கு சம்பளம் ரூ 6 கோடி என்பது அதிகாரப்பூர்வ செய்தி. இந்தியாவில் வேறெந்த நடிகையும் வாங்காத பெரும் சம்பளம் இது. இதற்கே வையைப் பிளந்தவர்கள், இப்போது ஒரு புதுப்படத்துக்கு ரூ 10 கோடி அவருக்கு சம்பளமாகப் பேசப்பட்டிருப்பதை அறிந்தால் என்ன ஆவார்களோ!
ஆம்... அடுத்து தான் நடிக்கும் ஒரு இந்திப்படத்துக்கு ரூ 10 கோடியை சம்பளமாகக் கேட்டுள்ளார் ஐஸ்வர்யா ராய். இதற்கு அந்தப் படத்தின் தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டுள்ளாராம்.
பாபி புஷ்கர்னா என்ற தயாரிப்பாளர் நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் ஐஸ்வர்யா ராயைச் சந்தித்து கதை சொன்னாராம்.
கதை அருமை என்று பாராட்டிய ஐஸ், அடுத்து கேட்டது சம்பளமாகக் கேட்டது ரூ 10!
ஒரு நிமிடம் அரண்டு போன தயாரிப்பாளர் பின்னர் சுதாரித்துக் கொண்டு, சரி தருகிறேன் என்று ஒப்புக் கொண்டாராம்.
ஆனால் படப்பிடிப்பை அடுத்த ஆண்டுக்குப் பிறகுதான் வைத்துக் கொள்ள முடியும் என ஐஸ் கூறிவிட, மறுப்பேதும் சொல்லாமல் மண்டையை ஆட்டியபடி வந்தாராம் பார்ட்டி. அழகு ஆட்டுவிக்கிறது!


Click it and Unblock the Notifications











