கருப்பு உடையில் கான்சை அதிர வைத்த ஐஸ்வர்யா ராய்

சென்னை: பிரான்சில் நடைபெற்று வரும் 75 வது கான்ஸ் திரைப்படவிழாவில் கருப்பு நிற உடை அணிந்து வந்து பார்வையாளர்களை அசர வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

கடந்த மே 17-ம் தேதி தொடங்கிய இத்திரைப்பட விழா மே 28 வரையில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவிற்கு தனது கணவரும் நடிகருமான அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் வருகை புரிந்தார் ஐஸ்வர்யா ராய்.

 கான்சை தவறவிடாத ஐஸ்

கான்சை தவறவிடாத ஐஸ்

ஒவ்வொரு ஆண்டும் கான்ஸ் திரைப்பட விழாவில் தவறாமல் கலந்து கொள்ளும் ஐஸ்வர்யா ராய் தனது வித்தியாசமான உடையலங்காரத்தால் பார்வையாளர்களைத் தன் வசப்படுத்துவார். லோரியல் அம்பாசிடரான அவர் கடந்த 2019-ம் ஆண்டு தங்க நிற உடை மற்றும் வெள்ளை நிற உடையில் ரெட் கார்ப்பெட் அணிவகுப்பில் பவனி வந்து பார்வையாளர்களின் மனதைக் கொள்ளை கொண்டார்.

Recommended Video

Red Carpet வரவேற்பு... கெத்தாக கலந்துகொண்ட இந்திய சினிமா பிரபலங்கள் |Filmibeat Tamil
 48 வயதிலும் ததும்பும் இளமை

48 வயதிலும் ததும்பும் இளமை

ஐஸ்வர்யா ராய்க்கு இப்போது 48 வயதாகிறது. மகள் ஆராத்யாவிற்கு 10 வயதாகிறது. என்றாலும் கான்சில் ஐஸ்வர்யா ராயின் அழகைப் பார்த்தவர்கள் இந்த வயதிலும் இளமை குன்றாமல் அவரது அழகு மெருகேரியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் வர்ணித்து வருகின்றனர். ஐஸ்வர்யா ராய் தனது வாழ்வில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர் தான். 10 ஆண்டுகளுக்கு முன் இதே கான்ஸ் விழாவில் குண்டான சதை போட்ட உடலோடு அவர் காட்சியளித்து கேலிகளுக்கும் கிண்டல்களுக்கும் ஆளானதும் உண்டு.

 சர்ச்சைகளும் உண்டு

சர்ச்சைகளும் உண்டு

தன்னை விட வயது குறைவான அபிஷேக் பச்சனை மணமுடித்தது முதல் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குவார் ஐஸ்வர்யா. 2016-ம் ஆண்டு சர்ப்ஜித் திரைப்பட புரோமோசன் விழாவில் ஐஸ்வர்யா ராய் பேசிக் கொண்டிருந்த போதே மேடையை விட்டு வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தினார் அபிஷேக் பச்சன். அதே போல் ஊடகங்களுக்கு முன் மகள் ஆராத்யா நிற்க பயந்த போது அவரைப் புகைப்படம் எடுக்க வேண்டாம் எனக் கூறி ஆத்திரமடைந்தார். என்றாலும் கண்ணியத்தை மீறி பொதுவெளியில் ஒருமுறை கூட அவர் நடந்து கொண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 பொன்னியின் செல்வனில் ஐஸ்

பொன்னியின் செல்வனில் ஐஸ்

மாபெரும் பொருட்செலவில் மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி மற்றும் மந்தாகினி கதாப்பாத்திரத்தில் ஐஸ்வர்யா நடித்து வருகின்றார். தமிழ் ரசிகர்கள் ஐஸ்வர்யா ராயை மீண்டும் திரையில் காண மிகுந்த ஆவலோடு உள்ளனர். இதற்கு முன் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராவணன் திரைப்படத்தில் ஐஸ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X