»   »  குத்துப் பாட்டுக்கு ஆடுவாரா ஐஸ்?

குத்துப் பாட்டுக்கு ஆடுவாரா ஐஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொத்தப் படத்துக்கும் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க முடியாமல் சோர்ந்து கிடக்கும் தமிழ், தெலுங்குப் படத் தயாரிப்பாளர்கள் சிலர், அவரைகுத்துப் பாட்டுக்கு ஆட வைக்கும் புதிய முயற்சியில் இறங்கியுள்ளனராம்.

தமிழ் சினிமாவிலேயே ஏகப்பட்ட நாயகிகள் கொட்டிக் கிடந்தாலும், புதுசு புதுசாக முகத்தை விரும்பும் ஹீரோக்களுக்கு ஒவ்வொரு படத்திலும்ஒரு புதிய நாயகி தேவைப்படுகிறது.

எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும் அவரை என்ன விலை கொடுத்தாவது தங்களுக்கு ஜோடியாக நடிக்க வைத்து விட முயற்சிக்கும்ஹீரோக்கள்தான் அதிகம்.

படையப்பாவில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க தீவிரமாக முயற்சித்தார்கள். முடியவில்லை, கடைசியில் ரம்யா கிருஷ்ணன் நடித்து பட்டையைக்கிளப்பி விட்டார். அதேபோல சந்திரமுகியிலும் ஐஸ்வர்யாவை முயற்சித்தார்கள். முடியவில்லை. ஜோதிகாவின் நடிப்பில் தமிழகமே மிரண்டுபோனது.

இப்போதும் கூட ஐஸ்வர்யா ராயை முயற்சிக்கும் தயாரிப்பாளர்களும், ஹீரோக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் ஐஸ்வர்யாதான்அவர்களை கண்டுகொள்வதாகத் தெரியவில்லை. தமிழில் மட்டுமல்ல, தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராய் மீது மோகம் இருந்து கொண்டேதான்இருக்கிறது.

இப்போது ஐஸ்வர்யா ராய்க்காக முட்டிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் புதிய கருத்து எழுந்துள்ளது. முழுப் படத்திற்குத்தான் அவர்கிடைப்பதில்லை. பேசாமல் குத்துப் பாட்டுக்கு ஆட வைத்தால் என்ன என்ற யோசனைக்கு அவர்கள் வந்துள்ளனர்.

ஒரு பாட்டுக்கு மட்டும் ஆடினால் போதும், 1 கோடி சம்பளம், என்ன சொல்றீங்க என்ற குறிப்புடன் ஐஸ்வர்யாவை இப்போது இவர்கள்அணுகியுள்ளனராம்.

ஐஸ் என்ன பதில் கொடுக்கப் போகிறார் என்பதை அறிய இந்த தயாரிப்பாளர்கள் தேவுடு காத்துக் கொண்டுள்ளனர்.

இப்போதைக்கு குத்துப் பாட்டுக்கு ஆட அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற பெயர் மல்லிகா ஷெராவத்துக்கு உள்ளது. ஒரு பாட்டுக்கு ஆட 50லட்சம் ரூபாய் சம்பளமாக கேட்கிறார் மல்லிகா. அதுவே படமாக இருந்தால் 40 வரைக்கும் படிகிறார்.

மல்லிகாவைப் போல ஐஸ்வர்யாவும் குத்துப் பாட்டுக்கு ஆடுவாரா என்பது போகப் போகத் தெரியும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil