Aishwarya Arjun: திருமணமாகி ஒரு வருஷம் ஆகிடுச்சு.. அர்ஜுன் மகள் வீட்டில் விசேஷம்.. ரசிகர்கள் ஹேப்பி!
சென்னை: நடிகர் அர்ஜுன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடப் படவுலகிலும் தனக்கென்று 'தனித்துவமான' ரசிகர்களை வைத்து இருக்கிறார். 'ஆக்ஷன் கிங்' என்ற அடைமொழியைக் கொண்ட இவர் இந்த காலத்து இளசுகள் கொண்டாடி வருகின்றனர். இவரின் மகள் ஐஸ்வர்யா, நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்த தம்பதிகளுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை ஐஸ்வர்யா, நடிகர் விஷால் நடித்த 'பட்டத்து யானை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்து இருந்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதைத்தொடர்ந்து. தனது அப்பா இயக்கிய 'பிரேம பர்ஹா' எனும் கன்னடப்படத்தில் நாயகியாக நடித்தார். இது 'சொல்லிவிடவா' என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் நடிகர் அர்ஜுன் இயக்கத்தில் அவர் நாயகியாக நடிக்கப் போவதாகச் சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இப்படம் தெலுங்கில் தயாராவதாகச் சொல்லப்பட்டது. அந்த படத்தின் ஹீரோவாக விஸ்வக் சென் நடிப்பதாகச் சொல்லப்பட்டு, படப்பிடிப்பு நேரத்தில் அவர் வெளியேறிவிட்டதால் அந்த படத்தின் வேலை அப்படியே நிறுத்தப்பட்டது.


காதல் திருமணம்: ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில், காதலை பெற்றோரிடம் சொல்லி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதியும் ஒரு போட்டியாளர் இருந்தார். அதன் படப்பிடிப்புக்கு ஐஸ்வர்யா சென்ற போது தான் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதையடுத்து, இவர்களின் திருமணம், அர்ஜூன் கட்டிய அஞ்சநேயர் கோவிலில் கடந்த ஆண்டு ஜூன் 10ந் தேதி நடைபெற்றது. ஐஸ்வர்யா, உமாபதி தம்பதிகளுக்கு திருமணமாகி இன்னோடு ஓராண்டுகள் நிறைவடைகிறது. இந்த நாளை அவர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு பலரும் இணையத்தின் வழியாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீதா பயணம்: திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யா 'சீதா பயணம்' என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதன் டீசர் அண்மையில் வெளியானது. இப்படத்தில் ஐஸ்வர்யாவிற்கு ஜோடியாக நிரஞ்சன் நடித்திருக்கிறார். அனூப் ரூபன்ஸ் இசையமைத்து இருக்கும் இப்படத்தில், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கோவை சரளா உட்படப் பலர் நடித்துள்ளனர். அர்ஜுனும் இப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழில் நிச்சயம் 'டப்' செய்யப்பட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பத்தாண்டுகளுக்குப் பின் நாயகியாகத் ஐஸ்வர்யா இப்படத்தல் நடித்து இருக்கிறார்.
இயக்குநர் உமாபதி: அதே போல, உமாபதி, தனது தந்தை தம்பிராமையாக எழுதிய ராஜாகிளி என்ற படத்தை இயக்கினார். இப்படத்தில் சமுத்திரக்கனி, ரேஷ்மா பசுபுலேட்டி, டேனியல் பாலாஜி, அருள்தாஸ் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் தொழிலதிபரான தம்பி ராமையா, தனது சில்மிஷ புத்தியாலும், சபலத்தாலும் எப்படி பிச்சைக்காரராக மாறுகிறார் என்பது தான் கதை. இந்த படத்தில் தம்பிராமையா அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தியேட்டரில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து உமாபதி, சமுத்திரக்கனி இயக்கி வரும் ஒரு படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











