அர்ஜுன் மகள் வீட்டில் விசேஷம்.. சுத்தியலை வச்சு இந்த தட்டு தட்டுறாரே.. மொத்தம் 33 கேக் கட் பண்ணாரா?

சென்னை: கடந்த ஆண்டு நடிகர் அர்ஜுன் மகளுக்கும் தம்பி ராமையா மகனுக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கடந்த பிப்ரவரி 10ம் தேதி ஐஸ்வர்யா அர்ஜுன் தனது 33வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நிலையில், சற்றுமுன் அதன் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் செய்துக் கொண்டார். ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கிய நிலையில், அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற உமாபதிக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் கிடைத்துவிட்டது.

Aishwarya Arjun Aishwarya Arjun birthday heroine

ஐஸ்வர்யா அர்ஜுனை சந்திக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அவரை காதலிக்க ஆரம்பித்து கடந்த ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணமும் செய்துக் கொண்டனர்.

33வது பிறந்தநாள்: நடிகர் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா அர்ஜுன் கடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது 33வது பிறந்தநாளை கணவர் உமாபதி மற்றும் குடும்பத்தினருடன் வேறலெவலில் கொண்டாடிய வீடியோவை சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதில், ஏகப்பட்ட கேக்குகளை அவர் வெட்டிக் கொண்டாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், கேக்குகள் வர காத்திருக்கின்றன என கேப்ஷன் போட்டதை பார்த்த ரசிகர்கள் மொத்தம் 33 கேக்குகளா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சுத்தியலில் உடைத்து: வித விதமான கேக்குகளை கட் செய்யும் வீடியோக்களை ஐஸ்வர்யா அர்ஜுன் வெளியிட்டுள்ளார். அதில், ஆரம்பத்திலேயே சுத்தியல் வைத்து உடைக்கும் வித்தியாசமான கேக்கும் இடம்பெற்றுள்ளது. தனது செல்ல நாய்க்குட்டியும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க கேண்டில் லைட் டின்னர் என பிறந்தநாளே அமர்க்களமாக கொண்டாடப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கணவருக்கு ஊட்டிவிட்டு: கேக் வெட்டி முடித்தக் கையோடு தனது கணவர் உமாபதி ராமையா மற்றும் அப்பா அர்ஜுன் மற்றும் அம்மா, சகோதரி என அனைவருக்கும் கேக் ஊட்டிவிடும் காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

சீதா பயணம் என்னாச்சு?: அப்பா அர்ஜுன் இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்து வரும் சீதா பயணம் படம் குறித்த புதிய அப்டேட்டை கொடுங்க என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்த அர்ஜுன் இந்த ஆண்டு அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலும் வில்லனாக மிரட்டியிருந்தார். அடுத்து அவர் இயக்கத்தில் உருவாகி வரும் சீதா பயணம் சீக்கிரமே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X