திருமணத்துக்குப் பிறகு சிகப்பு சேலை கட்டிக்கிட்டு அர்ஜுன் மகள் போட்ட குத்தாட்டத்தை பார்த்தீங்களா?
சென்னை: நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதியை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்க மாட்டார் என பலரும் நினைத்த நிலையில், அப்பா அர்ஜுன் இயக்கத்திலேயே சீதா பயணம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "எந்த ஊரு போரடி பொண்ணே" பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
ஆக்ஷன் கிங் அர்ஜுன் என தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் அர்ஜுன் விஜய், அஜித் படங்களில் அடுத்தடுத்து வில்லனாக நடித்து மிரட்டி வருகிறார். லியோ படத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி படத்திலும் அவர் தான் மெயின் வில்லன்.

மகள் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் இயக்கத்தில் பிசியான அர்ஜுன் மகளை வைத்தே சீதா பயணம் என்கிற டிராவல் படத்தை இயக்கி வருகிறார்.
சிகப்பு சேலையில் செம குத்தாட்டம்: 2013ம் ஆண்டு வெளியான விஷாலின் பட்டத்து யானை படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா அர்ஜுன். விஜய் சேதுபதி மகன், வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகாவுக்கு குவிவது போல பெரிதாக ட்ரோல் எல்லாம் குவியாமல், நல்லா நடிக்கிறாரே என பாராட்டுக்கள் கிடைத்தாலும், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. 2018ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பிரேம பராஹா எனும் படத்தில் நடித்தார். தமிழில் சொல்லிவிடவா என டப் செய்யப்பட்ட அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், அப்பா இயக்கத்தில் அவர் நடித்து வரும் சீதா பயணம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலில் சிகப்பு சேலை கட்டிக்கொண்டு செம குத்தாட்டம் போட்டுள்ளார். ஊர் பெயர்களை கொண்டு வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பாடல் கேட்ட உடனே பிடிக்கும் ரகத்தில் உள்ளது. இந்தளவுக்கு ஆடும் ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு ஏன் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்கிற கேள்வி தான் ரசிகர்களுக்கு நிச்சயம் எழும் என்கின்றனர்.
திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு: முன்பெல்லாம் திருமணம் முடிந்த உடனே ஒரு சில வருடங்கள் நடிகைகள் நடிப்பதை தவிர்த்துவிட்டு அதன் பின்னர், மீண்டும் நடிப்பார்கள். ஆனால், உமாபதியை திருமணம் செய்துக் கொண்ட பின்னர், உடனடியாக அப்பா இயக்கத்தில் ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நிரஞ்சன் எனும் புதுமுக நடிகர் அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











