திரும்ப பழைய மாதிரி ஸ்லிம் பியூட்டி ஆகிட்டாங்க நம்ம ஐஸ்...
மும்பை: கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினமான நேற்று முன் தினம் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சன் தனது தாயார் குடும்பத்தோடு அருகிலிருந்த உள் விளையாட்டு அரங்கத்திற்கு சென்றிருந்தார். உடன் தனது இரண்டு வயது மகள் ஆராத்யாவையும் அழைத்துச் சென்றார்.
அங்கு எடுக்கப் பட்ட சில புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஐஸ். அதில், கருப்பு உடையணிந்து இருக்கும் ஐஸ்வர்யா ராயைப் பார்க்கும் போது, 'நம்ம ஐஸ்ஸா இது' என ஆச்சர்யப்பட வைக்கிறார்.
காரணம் அவ்வளவு உடல் மெலிந்து ஸ்லிம் பியூட்டியாகக் காட்சியளிக்கிறார் ஐஸ்.

கர்ப்பம்... பிரசவம்
கர்ப்பமான நாள்தொட்டு உடல் எடை அதிகரித்து வந்த ஐஸ், பிரசவத்திற்குப் பின் நன்கு குண்டாகிக் காணப்பட்டார்.

குண்டுப்பெண்...
வெளிநாட்டு விழாக்களில் கலந்து கொண்ட போது கூட, அவரது குண்டு உடல் பலரது விமர்சனத்துக்கு ஆளானது.

வயதாகிவிட்டது....
அவ்வளவு தான் ஐஸ்க்கு வயதாகி விட்டது, முகம் முதிர்ந்து விட்டது என பல செய்திகள் அவரைப் பற்றி உலா வந்தன.

ஒரே ஹேர்ஸ்டைல்...
அதற்குத் தகுந்தபடி, தனது பூசிய கன்னங்களை மறைக்கும் வகையில் ஒரே விதமான ஹேர்ஸ்டைலுடன் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார் ஐஸ்.

பழைய ஐஸ்....
இந்நிலையில் தற்போது மீண்டும் நன்கு மெலிந்து, பழைய பொலிவுடன் வளைய வருகிறார் ஐஸ் என்பதற்கு இந்தப் புதிய புகைப்படங்களே உதாரணம்.


Click it and Unblock the Notifications











