வாவ் …என்ன ஒரு போஸ்..பிக்பாஸ் புகழ் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படம் இதோ !
சென்னை : கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்து வரும் நடிகையும் பிக்பாஸ் பிரபலமான ஐஸ்வர்யா தத்தா, இப்பொழுது அட்டகாசமான போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இப்பொழுது எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து வரும் இவருக்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு இருந்து வரும் நிலையில் விரைவில் முன்னணி நடிகர்களுடனும் இணைவார் என தெரிகிறது.
இதற்கு முன் தொடையை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கெஞ்சவிட்ட ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது ப்ளூ அண்ட் ப்ளூ கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் எங்க வைத்துள்ளார்.

விஷாலின் பாயும் புலி
"தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்" திரை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா அந்த திரைப்படத்தில் பார்க்கவே பரிதாபமாக வெள்ளந்தி பெண்ணாக நடித்திருந்ததை அடுத்து விஷாலின் பாயும் புலி திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்திலும் வந்து சென்றார்.

டிஆர்பி க்கு மிகப்பெரிய தீனி
சில ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும் ஐஸ்வர்யா தத்தா ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆகாத நிலையில், பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு சக போட்டியாளர்களை கதற வைத்ததோடு டிஆர்பி க்கு மிகப்பெரிய தீனி போட்டார்.

பைனல்ஸ் வரைக்கும்
அந்த அளவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் படுஜோராக விளையாண்டு மக்களின் மனதை வென்று ஓட்டுக்களை அள்ளிய ஐஸ்வர்யா பைனல்ஸ் வரைக்கும் சென்று ரன்னரப்பை தட்டிச்சென்றார்.

வித்தியாசமான திரைப்படம்
பிக்பாஸ் மூலம் இவருக்கு மேலும் பல கோடி ரசிகர்கள் உருவானதை அடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வர இப்பொழுது அலேகா, கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மிளிர் போன்ற வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வர விரைவில் அவை வெளியாக உள்ளது.

கவர்ச்சி சொட்டச் சொட்ட
கொரோனா காலத்தில் பல திரைப்படங்கள் வெளியிடப்படாமல் முடங்கிப் போயுள்ள நிலையில் அதில் ஐஸ்வர்யாவின் திரைப்படங்களும் அடங்கி இருக்க, ரசிகர்களை குளிர்விக்கும் வகையில் கவர்ச்சி சொட்டச் சொட்ட பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வந்த ஐஸ்வர்யா இப்போது மற்றுமொரு படுகவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அனைத்தும் நீல நிறத்தில்
வித்தியாசமான கவர்ச்சி உடையில் கண்ணாடி போல மின்னும் பளபளப்பான ஒற்றைக் காலை தூக்கி நாற்காலியின் மீது வைத்து லிப்ஸ்டிக் உள்பட அனைத்தும் நீல நிறத்தில் இளைஞர்களின் மனசைத் தூண்டும் இந்த வித்தியாசமான கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது பெரும் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











