பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய பிக் பாஸ் பிரபலம்... சொல்லக் கூடாத இடத்தில் தட்டிய நபர்!
சென்னை : சமீப காலமாகவே பல்வேறு போட்டோஷூட்களை நடத்தி அனைவரையும் கதிகலங்க வைத்து வரும் நடிகை ஐஸ்வர்யா தத்தா சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடி உள்ளார்.
மிகவும் நெருக்கமான நண்பர்களையும் உறவினர்களையும் மட்டும் அழைத்து கொண்டாடிய பிறந்தநாள் வீடியோவை இப்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என செம ஜாலியாக கொண்டாடிய ஐஸ்வர்யா விதவிதமான பழங்களை வெட்டிய நிலையில் அதில் ஒருவர் சொல்லக் கூடாத இடத்தில் தட்டி உள்ளார்.

அளவான கவர்ச்சி
தமிழ் ரசிகர்களின் மனதுக்கு மிக நெருக்கமான இளம் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. க்யூட்டான நடிப்பு அளவான கவர்ச்சி என தனது ஒவ்வொரு திரைப்படங்களிலும் ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர் இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

கவனம் செலுத்தாமல்
இப்போதைக்கு வேற்று மொழித் திரைப்படங்களில் கவனம் செலுத்தாமல் தமிழில் மட்டுமே முழு மூச்சுடன் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தாவுக்கு அடுத்தடுத்த படங்கள் இப்போது வெளியாக காத்துக்கொண்டிருக்கின்றன.

கிசுகிசுக்கப்பட்ட நிலையில்
நடிகர் மஹத்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நிலையில் இப்பொழுது " நல்லவன்னு பெயரெடுத்த கெட்டவன்டா " என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்து வரும் அதே சமயம் மிளிர் உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

நெருங்கிய நண்பர்கள்
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது 26வது பிறந்தநாளை மிகக் கோலாகலமாக நெருங்கிய நண்பர்கள் உறவினர்களின் படைசூழ கொண்டாடிய ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது அதன் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வேண்டுகோளுக்கு இணங்க
அந்த வீடியோவில் யாஷிகா ஆனந்த் வந்த உடனேயே ஐஸ்வர்யாவின் பின் சொல்லக்கூடாத இடத்தில் பலமுறை தட்டியுள்ளார். எனினும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஐஸ்வர்யா அதை தொடர்ந்து ஹாப்பி மோட்டில் பலரும் ஹாப்பி பர்த்டே ஐசு என்ற வாசகம் அடங்கிய டீசர்ட் அணிந்து கொண்டு ஐஸ்வர்யாவின் 26 ஆவது பிறந்த நாள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கலை கட்டியது மேலும் இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோவை ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இப்பொழுது ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதை அடுத்து பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











