ஆண் நண்பர்களுடன் தலையை விரித்துப் போட்டு தரலோக்கலாக குத்து டான்ஸ்.. ஐஸ்வர்யா தத்தா!

சென்னை : நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸுக்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் ஒப்பந்தம் ஆனாலும் இதுவரை எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.

நடிகர் ஆரி அர்ஜுனன் உடன் இணைந்து நடித்துள்ள அலேகா படம் மட்டும் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

இனிமேலும் பொருத்தால் வேலைக்காகாது என கவர்ச்சி கடலில் குதித்து கிளாமரில் கத்துகிட்ட மொத்த வித்தையையும் காட்டி வரும் ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது ஆண் நண்பர்களுடன் இணைந்து கானா பாடலுக்கு செம குத்து டான்ஸ் போட்டுள்ள வீடியோ செம வைரலாகி வருகிறது.

பொல்லாத உலகில் பயங்கர கேம்

பொல்லாத உலகில் பயங்கர கேம்

பெரும்பான்மையான இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளது பப்ஜி விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் "பொல்லாத உலகில் பயங்கர கேம் " என்ற படத்தில் நடிகை ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து மஹத் உடன் இணைந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, அலேகா போன்ற படங்களிலும் கைவசம் நடித்து வருகிறார்.

அலேகா ரிலீசுக்கு

அலேகா ரிலீசுக்கு

ஹீரோயின் மற்றும் சிறப்பு வேடங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருந்த ஐஸ்வர்யா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உலகம் முழுவதும் அறியப்பட்டார். அதைத்தொடர்ந்து படவாய்ப்புகளும் எக்கச்சக்கமாக குவிந்தது. கை நிறைய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும் இன்றுவரை எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ஆரியுடன் இணைந்து நடித்துள்ள அலேகா மட்டும் ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்ற தகவல் வெளியாகி இருந்தது.

தமிழ் ரீமேக்

தமிழ் ரீமேக்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மிளிர் திரைப்படத்தில் சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கும் ஐஸ்வர்யா அதைத் தொடர்ந்து நான்கு விதமான பெண்களை மையப்படுத்தி உருவாகி வரும் "ஷ்" என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற லஸ்ட் ஸ்டோரீஸ் தமிழ் ரீமேக் ஆகும்.

Recommended Video

Aishwarya Rajesh மக்களிடம் வேண்டுகோள் | நம்மையும் நாட்டையும் பாதுகாப்போம்
தரலோக்கலாக குத்து டான்ஸ்

தரலோக்கலாக குத்து டான்ஸ்

இனிமேலும் இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்தால் வேலைக்காகாது என கவர்ச்சிக் கடலில் குதித்து அடிக்கடி கண்கள் கூசும் அளவிற்கு கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு கதிகலங்கவிட்டு வருகிறார். இப்போது சுற்றிலும் ஆண் நண்பர்கள் சூழ நடுவில் சிங்கப்பெண்போல கானா பாடலுக்கு தரலோக்கலாக இறங்கி தலையை விரித்து போட்டு குத்து டான்ஸ் போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X