ஒரு சைடு ரோஸு... ஒற்றைக்காலில் டான்ஸு.. கலக்கும் பிக் பாஸ் நடிகை!
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்திற்கு பிறகு பாயும் புலி மற்றும் சத்ரியன் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார்.
இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா தத்தா ஒரு சைடு ரோஸ் உடன் பூப்போட்ட பாவாடை சட்டையில் ஒற்றைக்காலில் அழகாய் நடனமாடிய புகைப்படங்கள் இணைய தளத்தை கலக்கி வருகிறது.

பாயும் புலி
அட்டகத்தி தினேஷ், நகுல் இணைந்து நடித்திருந்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்பொழுது பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளார். முதல் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த இவருக்கு அடுத்தடுத்து ஹீரோயின் கதாபாத்திரங்கள் வரவில்லை என்றாலும் பாயும் புலி மற்றும் சத்ரியன் ஆகிய படங்களில் சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதிக வாக்குகள்
சில படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா தாத்தாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய பிரபலத்தை பெற்று தந்தது முதல் சீசனை விடவும் இரண்டாவது சீசன் செமையாக கலை கட்டியது. அதில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இறுதி சுற்று வரை சென்று ரன்னர் இடத்தை பிடித்தார்.
Recommended Video

4 பெண்களை மையமாக
இப்பொழுது ஆரி உடன் இணைந்து அலேகா என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது. தொடர்ந்து மிளிர், கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம் மற்றும் 4 பெண்களை மையமாக வைத்து உருவாகிவரும் ஷ் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

ஒற்றைக்காலில் டான்ஸ்
சில ஆண்டுகளாகவே ஐஸ்வர்யாவுக்கு எந்த ஒரு திரைப்படமும் வெளியாகாத நிலையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் குயினாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு கெத்து காட்டி வருகிறார். அந்த வகையில் இப்போது பூப்போட்ட பாவாடை சட்டையில் ஒரு சைடு ரோஸ் வைத்துக்கொண்டு ஒற்றைக்காலில் அழகாய் மயில் போல நடனம் ஆடியவாறு உள்ள புகைப்படங்களை பதிவிட்டு இணையதளத்தை கலக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











