ஜிலேபி போல பளபளன்னு மின்னும் பிரபல பிக் பாஸ் நடிகை... கண்ணு கூசுதுடா சாமி!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவரது மனதையும் கொள்ளையடித்த நடிகை ஐஸ்வர்யா தத்தா 4 கதாநாயகிகளில் ஒருவராக ஷ் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
ஆரியுடன் இணைந்து நடித்த அலேகா படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.
அடிக்கடி சர்ச்சைக்குரிய புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் குயினாக வலம் வரும் இவர் இப்பொழுது பட்ட ஜிலேபி கணக்கா பளபளன்னும் மின்னும் புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளால் நனைந்து வருகிறார்.

இடத்தை பிடித்துள்ளார்
அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வருகை தந்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இப்பொழுது தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் தமிழ் சினிமாவிற்கு அறிமுக படுத்தப்பட்ட இவர் அதில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றிருந்தார்.

தொடர்ந்து வைரலாகி வருகிறது
தொடர்ந்து ஹீரோயின் கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றாலும் சிறப்பு தோற்றத்தில் மற்றும் தங்கை கதாபாத்திரங்கள் என எது கிடைத்தாலும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பயன்படுத்திக் கொள்ளும் இவருக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் காத்திருக்கிறது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் இரண்டில் கலந்து கொண்ட இவருக்கு இப்பொழுது உலக அளவில் பல லட்ச கணக்கில் ரசிகர்கள் உருவாகியிருக்க சமூக வலைதளங்களில் இவர் பதிவிடும் அத்தனை பதிவுகளும் தொடர்ந்து வைரலாகி வருகிறது.

கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா
குறிப்பாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் கில்லாடியான ஐஸ்வர்யா தத்தா ஆரியுடன் இணைந்து நடித்திருக்கும் அலேகா திரைப்படத்தின் கலக்கலான ட்ரைலர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து விரைவில் ரிலீசாக உள்ளது. இதைத்தொடர்ந்து கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, மிளிர் உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ளது.

கண்கள் கூசும் முன்னழகு
அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் ஐஸ்வர்யா இப்பொழுது பட்ட ஜிலேபி கணக்கா சும்மா தகதகன்னு மின்னும் கவர்ச்சி உடையில் பளபளன்னும் கண்ணாடி போல பார்க்கும் அனைவருக்கும் கண்கள் கூசும் அளவிற்கு முன்னழகை காட்டிக்கொண்டு உள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











