சிகப்பு சேலையில் சிக்குன்னு போட்டோஷூட் நடத்திய ஐஸ்வர்யா தத்தா!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு ரசிகர்களின் பெரும் பேரன்பால் கை நிறைய படங்களில் ஒப்பந்தமானார் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

அடிக்கடி விவகாரமான கிளாமர் போட்டோ ஷூட்களை நடத்தி இணையதளத்தை தெறிக்கவிடும் ஐஸ்வர்யா இப்பொழுது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் வித்தியாசமான காஸ்ட்யூமில் சிகப்பு சேலையில் சிக்கென போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை மீண்டும் தவிக்கவிட்டிருக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.

ஆரம்பத்திலேயே கதாநாயகி

ஆரம்பத்திலேயே கதாநாயகி

பிக் பாஸ் சீசன் 2 இல் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவிற்கு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்திலேயே கதாநாயகியாக நடித்த இவருக்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு வரவில்லை என்றாலும் தங்கையாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தது. அந்த வகையில் சத்ரியன் மற்றும் பாயும் புலி போன்ற படங்களில் தங்கை வேடங்களில் நடித்து வந்தார்.

சர்ச்சைக்குரிய போட்டியாளர்

சர்ச்சைக்குரிய போட்டியாளர்

நடித்த சில படங்களில் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த இவர் ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்கு பிரபலமாகவில்லை. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளராக கலந்து கொண்டு மிகப்பிரபலமானார். பிக்பாஸில் சர்ச்சைகளுக்கு கொஞ்சம் கூட பஞ்சம் இல்லாமல் செம தீனி போட்ட ஐஸ்வர்யா தத்தா எந்த அளவிற்கு நற்பெயர் எடுத்தாரோ அதே அளவிற்கு எதிர்மறையான விமர்சனங்களும் கிடைத்தது .

அலேகா விரைவில் ரிலீஸ்

அலேகா விரைவில் ரிலீஸ்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கை நிறைய படங்களில் ஒப்பந்தமானார். மிளிர், அலேகா,கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, பொல்லாத உலகில் பயங்கர கேம், கன்னித்தீவு போன்ற திரைப்படங்களில் ஐஸ்வர்யா தத்தா இப்போது கைவசம் நடித்து வருகிறார். இந்த லிஸ்டில் ஆரிக்கு ஜோடியாக நடித்துள்ள அலேகா திரைப்படம் மட்டும் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது.

Recommended Video

வாய்ப்பளித்த இயற்கைக்கு நன்றி | Actor Vidhu chat | Filmibeat Tamil
கதாநாயகிக்கு முக்கியத்துவம்

கதாநாயகிக்கு முக்கியத்துவம்

நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை தொடர்ந்து நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில் நடித்து வருகிறார் . அந்த வகையில் மிளிர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படமாக உருவாகி வருகிறது. மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது.

தொப்புள் அழகை காட்டி

தொப்புள் அழகை காட்டி

இவ்வாறு பரபரப்பாக பல திரைப்படங்களில் நடித்து வரும் அதே சமயம் சர்ச்சைக்குரிய பல கிளாமர் ஃபோட்டோ ஷூட்களையும் நடத்தி இணையதளத்தை தெறிக்க விட்டு வரும் இவர் இப்பொழுது மீண்டும் அதே போல போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். பீச் ஓரத்தில் சிகப்பு சேலையை காற்றில் பறக்க விட்டவாறு தொப்புள் அழகை காட்டிக்கொண்டு ஐஸ்வர்யா தத்தா நடத்தியுள்ள இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X