உலக அழகிப் போட்டியில் கோயல் ஏமாற்றினாலும் கௌரவம் சேர்த்த ஐஸ்வர்யா ராய்
லண்டன்: லண்டனில் நடந்த உலக அழகிப் போட்டியில் முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பச்சன் கௌரவிக்கப்பட்டார்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் 2014ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தென்னாப்பிரிக்க அழகி ரோலீன் ஸ்ட்ராஸ் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் இந்திய அழகி கோயல் ராணாவால் முதல் பத்து இடங்களுக்குள் தான் வர முடிந்தது.

ஐஸ்வர்யா
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், தாய் விருந்தா ராய் மற்றும் மகள் ஆராத்யாவுடன் கலந்து கொண்டார்.

கௌரவிப்பு
உலக அழகிப் பட்டம் வென்றவர்களிலேயே ஐஸ்வர்யா ராய் தான் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். இந்நிலையில் உலக அழகிப் போட்டியில் அவர் கௌரவிக்கப்பட்டார்.

நன்றி
என்னை கௌரவித்த உலக அழகி அமைப்புக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பட்டத்தை வென்று பெருமையுடன் கிரீடத்தை அணியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்றார் ஐஸ்வர்யா ராய்.

1994
ஐஸ்வர்யா ராய் 1994ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றார். அதன் பிறகு அவர் நடிகையாகிவிட்டார். நடிப்பு, விளம்பரத் துறையில் மிகவும் பிரபலமாக உள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











