தயவு செஞ்சு அப்படி என்னை ஆக்கிடாதீங்க.. காதல் பற்றி ஐஸ்வர்யா லட்சுமி ஓபன் டாக்

சென்னை:நடிகை ஐஸ்வர்யா லட்சுமி மலையாளம் மற்றும் தமிழில் பெயர் சொல்லும்படியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி என்ற கதாபாத்திரத்தை ஏற்று ரசிகர்களை கிறங்கடித்தார். மேலும் கட்டா குஸ்தி படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்தும் அதகளம் செய்திருந்தார் அவர். இந்தச் சூழலில் ரிலேஷன்ஷிப் குறித்து அவர் ஓபனாக ஒரு பேட்டியில் பேசியிருக்கிறா.

ஐஸ்வர்யா லட்சுமி மாடலாக பிரபலமடைந்ததை அடுத்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வர தொடங்கின. அப்படி அவர் மலையாளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான என்ஜன்டுகலுடே நாட்டில் ஒரிடவலே என்ற படத்தின் மூலம் எண்ட்ரி ஆனார். அதில் நிவின் பாலி ஹீரோவாக நடித்தார்.அந்தப் படத்தைத் தொடர்ந்து மாயநதி, வரதன் உள்ளிட்ட படங்களிலும் நடித்து ஃபேமஸ் ஆனார்.

aishwarya lakshmi tamil cinema kollywood

தமிழில் ஐஸ்வர்யா: சூழல் இப்படி இருக்க கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இருந்தாலும் இதற்கு முன்னதாகவே விஷால், தமன்னா நடித்த ஆக்‌ஷன் படத்தில் சிறிய பாத்திரத்தில் வந்து சென்றது குறிப்பிடத்தக்கது. ஜகமே தந்திரம் படத்தில் ஈழத்து பெண்ணாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி வெகுவாகவே கவனம் ஈர்த்தார்.

தமிழில் பலத்த வரவேற்பு: அதனைத் தொடர்ந்து புத்தம்புது காலை விடியாதா, கேப்டன், கார்கி, கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பொதுவாக மலையாள தேசத்து நடிகைகள் மீது தமிழ் ரசிகர்களுக்கு ஈர்ப்பு இருக்கும் என்பதற்கேற்ப சமூக வலைதளங்களில் ஐஸ்வர்யா லட்சுமியை கொண்டாட ஆரம்பித்தனர். இதனால் தமிழில் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார்.

பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி: அவரது கரியரில் முக்கியமான படங்களாக அமைந்தது பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களும், கட்டா குஸ்தி படமும்தான். பொன்னியின் செல்வனில் அவர் ஏற்றிருந்த பூங்குழலி கதாபாத்திரத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர். முக்கியமாக கல்கி எழுதிய பூங்குழலி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி உயிர் கொடுத்துவிட்டார் என்று கூறினர்.

மேலும் இனி பொன்னியின் செல்வன் பூங்குழலி என்றால்ரே ஐஸ்வர்யாதான் நினைவுக்கு வருவார் என்றும் படம் பார்த்தவர்கள் கூறினர். அதேபோல் கட்டா குஸ்தி படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் போல்டான கதாபாத்திரம். ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கு பிறகு அவருக்கு தமிழில் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

ஐஸ்வர்யா பேட்டி: இதற்கிடையே அவர் காதலித்துவருவதாக கூறப்பட்டது. சூழல் இப்படி இருக்க சமூக வலைதளத்தில் அவர் உரையாடியபோது ரசிகர் ஒருவர், நீங்கள் காதலிக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, "நீங்கள் காதலிக்கிறீர்களா என்ற கேள்வியைத்தான் பலரும் கேட்கிறார்கள். நான் மகிழ்ச்சியான சிங்கிளாக இருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை டபுள் ஆக்க முயற்சி செய்யாதீர்கள்" என்று ஓபனாக குறிப்பிட்டிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X