96 இசையமைப்பாளருடன் ஜகமே தந்திரம் ஹீரோயின்; இரண்டு பேருக்கும் இடையே என்ன ரிலேசன்ஷிப் தெரியுமா?
சென்னை: தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் ஜோடியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி மற்றும் 96 பட இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகர் விஷாலின் ஆக்ஷன் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தொடர்ந்து தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் நடித்த அவர், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

படிச்சது டாக்டருக்கு
கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு 31 வயதாகிறது. கடந்த செப்டம்பர் 6ம் தேதி தான் தனது பிறந்தநாளை கொண்டாடினார். எர்ணாகுலத்தில் உள்ள ஸ்ரீநாராயணா மருத்துவ கல்லூரியில் டாக்டர் படிப்பை படித்துள்ள இவர், ஃபேஷன் துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2017ல் மலையாளத்தில் வெளியான Njandukalude Nattil Oridavela எனும் படம் மூலம் அறிமுகமானார்.

தனுஷுக்கு ஜோடியாக
மலையாளத்தில் வெளியான மாயநதி படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை ஏற்படுத்தி தந்தது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடித்த ஆக்ஷன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அடுத்ததாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயத்தில் தனுஷ் நடித்து நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

பூங்குழலி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் படகோட்டிப் பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி. ஐஸ்வர்யா ராய், திரிஷாவின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில், இதுவரை இவரது ஒரு புகைப்படம் கூட இணையத்தில் கசியவில்லை.

96 இசையமைப்பாளருடன்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாளை முன்னிட்டு 96 இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவுடன் டின்னர் சாப்பிட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸில் போட அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

இருவரும் நெருக்கமாக
ரெஸ்டரன்ட் ஒன்றில் இருவரும் இணைந்து உணவு உண்ணும் புகைப்படம் மற்றும் இருவரும் ஒருவரை ஒருவர் ஹக் பண்ணியபடி இருக்கும் நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இவர்கள் தொடர்பாக ஏகப்பட்ட கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.

என்ன உறவு
விஜய்சேதுபதி, திரிஷா நடித்த 96 படத்தில் அத்தனை அருமையான பாடல்களை இசையமைத்து ரசிகர்களை காதலில் உருக வைத்த இசையமைப்பாளர் கோவிந்த வசந்தாவும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியும் உறவினர்களாம். "அண்ணா" என்றே பல முறை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸில் அவருடன் எடுத்த புகைப்படங்களை ஐஸ்வர்யா ஷேர் செய்துள்ளார்.
Recommended Video

மீண்டும் விஜய்சேதுபதி படத்திற்கு
96 படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திற்கும் கோவிந்த் வசந்தா இசையமைத்து இருந்தார். இந்நிலையில் இந்த வாரம் நேரடியாக சன் டிவியில் ரிலீசாகவுள்ள விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் திரைப்படத்திற்கும் கோவிந்த் வசந்தா தான் இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களுக்கு அதிகளவில் இசையமைத்து வருகிறார் கோவிந்த் வசந்தா.


Click it and Unblock the Notifications











