விஜய் அண்ணா ஜெயிக்கணும்.. எனக்கு இங்கே ஓட்டு இல்லையே.. பிரபல நடிகை அதிரடி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுதினம் வரவிருக்கின்றன. இந்தத் தேர்தலில் விஜய் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை தெரிந்துகொள்வதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஆவலோடு காத்திருக்கிறது. கண்டிப்பாக ஆட்சியை பிடித்துவிடுவோம் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாகவும் பனையூர் பட்சிகள் கூறுகின்றன. இந்நிலையில் பிரபல நடிகை ஐஸ்வர்யா லட்சுமி வரவிருக்கும் முடிவுகள் பற்றி ஓபனாக பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இந்த முறை நான்கு முனை போட்டியை சந்தித்தது. இந்தப் போட்டியில் விஜய்தான் அதீத கவனத்தை ஈர்த்திருக்கிறார். கரூர் துயர சம்பவம், சங்கீதா பிரசனை, திரிஷா விவகாரம், ஜனநாயகன் லீக் என அவரை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் எழுந்தாலும்; அவரிடமிருந்து இம்மியளவும் நகரவில்லை அவரது தொண்டர்களும், ரசிகர்களும். என்ன நடந்தாலும் நாங்கள் அவருடனேயே இருப்போம் என்பதை ஒவ்வொரு முறையும் நிரூபித்தார்கள். அவர்களை பலரும் பல வார்த்தைகளை சொல்லி விமர்சித்தாலும் எதையும் கண்டுகொள்ளவில்லை.

Aishwarya Lekshmi Backs Vijay Ahead of TN Election Results He Will Win
Photo Credit:

எதிர்பார்ப்பில் தமிழ்நாடு: பரப்புரையையும் விஜய் முழுவதுமாக செய்யவில்லைதான். இருந்தாலும் அவருக்கான கூட்டம் இருந்தது என்பது உண்மை. நாளை மறுதினம் தேர்தல் முடிவுகள் வரவிருக்கின்றன. விஜய்யை பொறுத்தவரை ஒன்று தனித்து ஆட்சியை பிடிப்போம் அல்லது தொங்கு சட்டப்பேரவை அமையும், நாம் கிங் மேக்கராக முடியும் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது. அதேசமயம் எக்ஸிட் போலில் வந்த முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக இருந்தாலும் அதை நம்புவதற்கு தவெகவினர் தயாராக இல்லை.

Also Read
விஜய் செய்த பிராங்க்.. சிம்பு பெயரை எல்லாம் இழுத்து விட்ருக்காரு.. தளபதியின் அறியாத பக்கங்கள் பாருங்க
விஜய் செய்த பிராங்க்.. சிம்பு பெயரை எல்லாம் இழுத்து விட்ருக்காரு.. தளபதியின் அறியாத பக்கங்கள் பாருங்க

திரைத்துறையில் ஆதரவு எப்படி?: திரைத்துறையிலும் விஜய்க்கு ஆதரவு நன்றாகவே இருக்கிறதாம். நடிகர் ஜெய், சிபிராஜ் உள்ளிட்டோர் எல்லாம் ஓபனாகவே தங்கள் ஆதரவை தெரிவித்தார்கள். இவர்கள் தவிர்த்த் சிம்பு உள்ளிட்ட சீனியர் நடிகர்களும் விஜய்க்குதான் வாக்களித்தார்கள் என்று திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. சாமானியர்கள் மட்டுமின்றி செலிபிரிட்டிகள், அரசு அதிகாரிகளிடம் தவெகவுக்கான வாய்ஸ் நன்றாக இருக்கிறது என்பது அவர்களது அதீத நம்பிக்கை.

ஐஸ்வர்யா லட்சுமி பேட்டி: இந்நிலையில் பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "விஜய் அண்ணா என்றால் எனக்கு பிடிக்கும். நான் கேரளாவில் இருக்கிறேன். எனக்கு இங்கே வாக்கு இல்லை. அதை நினைத்தால்தான் ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. ச்ச இந்த ஒரு முறை மட்டும் தமிழ்நாட்டுக்கு சென்று வாக்களிக்கலாமே என்று நானும், எனது தோழிகளும் பேசிக்கொண்டு இருந்தோம்.

அவருக்கு தேவையே இல்லை: விஜய் வெல்ல வேண்டும் என்ற வாழ்த்தும், வேண்டுதலும் இருக்கிறது. அந்த மனிதருக்கு இப்படி செய்ய வேண்டிய எந்தத் தேவையுமே இல்லை. நன்றாக சம்பாதித்துக்கொண்டு ரொம்பவே வசதியாக இருக்கிறார். மக்களின் அன்பும், ஆதரவும் அவருக்கு இருக்கிறது. இருந்தாலும் அத்தனையையும் விட்டுவிட்டு மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று வந்திருக்கிறார். அவர் கண்டிப்பாக வெல்வார். வெல்ல வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X