அருவியில் ஆனந்தக் குளியல் போட்ட பொன்னியின் செல்வன் பூங்குழலி.. ஐஸ்வர்யா லக்ஷ்மி அழகே அள்ளுது!
சென்னை: பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்கள் இதயங்களை கொள்ளையடித்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பாலி தீவில் தனது விடுமுறையை கொண்டாடி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.
அமலா பால், சமந்தாவை தொடர்ந்து ஐஸ்வர்யா லக்ஷ்மியும் பாலி தீவுக்கு டூர் சென்றுள்ளார். இப்படியொரு அட்வெஞ்சரை தான் எதிர்பார்க்கவே இல்லை என்றும் பிளான் பண்ணாமல் நடந்த டூர் இது என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

சமீபத்தில், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் வெளியான கிங் ஆஃப் கொத்தா படுதோல்வியை சந்தித்த நிலையில், கொஞ்சம் மனசை ரிலாக்ஸ் செய்ய இப்படி கிளம்பிட்டீங்களா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் பூங்குழலி: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் எந்தவொரு நடிகை நடித்தாலும் அவ்ளோ அழகா தெரிவாங்க, பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக கடலில் இருந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி வரும் முதல் ஃபிரேமே ரசிகர்களை ஜில்லாக்கி விட்டது.

வந்தியத்தேவன் கார்த்தியை போலவே அனைத்து ரசிகர்களும் வாய் பிளந்து பார்க்க ஆரம்பித்தனர். இந்நிலையில், தற்போது அவர் பாலி தீவில் இருந்து வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வீடியோக்களும் அதை விட ரசிகர்களை கண்குளிர வைத்துள்ளது.
டோட்டல் டேமேஜ்: துல்கர் சல்மான் நடித்த சீதாராமம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில், துல்கர் சல்மான் உடன் இணைந்து கேங்ஸ்டர் படமான கிங் ஆஃப் கொத்தா படத்தில் நடித்தால் இன்னொரு ஹிட் கிடைக்கும் என நம்பிய ஐஸ்வர்யா லக்ஷ்மிக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காமல் டோட்டல் டேமேஜ் செய்து விட்டது.

இந்நிலையில், அடுத்த படத்திற்கு லைட்ஸ் மற்றும் கேமராவுக்கு முன்பாக மேக்கப் போட்டுக் கொண்டு நிற்பதற்கு முன்பாக கொஞ்சம் மனசுக்கும் உடம்புக்கும் ரெஸ்ட் கொடுக்க பாலி தீவுக்கு தனது தோழிகளுடன் கிளம்பி சென்றிருக்கிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி.
அருவியில் ஆனந்தக்குளியல்: பாலி தீவில் த்ரில்லான இடங்களுக்கு சென்று சாகசங்களை செய்து வரும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி அங்கேயுள்ள அருவி ஒன்றில் ஆனந்தக்குளியல் போடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் வாயில் இருந்து வாட்டர் ஃபால்ஸை வரவைத்துள்ளார்.
ஐஸ்வர்யா உங்க அழகாலே கொல்லுறீங்களே என்றும் அடுத்த படத்துக்கு ஆவலுடன் வெயிட்டிங் என்றும் ரசிகர்கள் பூங்குழலிக்கு கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜியை போட்டுத் தாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











