Don't Miss!
- News
"தமிழுக்கு வெறும் ரூ.23 கோடி.. ஆனால் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ.643 கோடி" உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Lifestyle
உங்க முகம் எப்பவும் டல்லா இருக்கா? அப்ப பளபளப்பா ஜொலிக்க பீட்ருட்டை இப்படி யூஸ் பண்ணுங்க போதும்!
- Automobiles
பெட்ரோல் பைக் வச்சிருந்தா அத ஓரங்கட்டி வச்சிடுங்க.. இந்த இ-சைக்கிள்ல ஒரு கிமீ பயணிக்க வெறும் 5 பைசாதான் ஆகும்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
என்னையும் தப்பா தொட்டுருக்காங்க.. பொன்னியின் செல்வன் நடிகை பரபரப்பு பேச்சு.. என்ன பண்ணார் தெரியுமா?
சென்னை: இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறி உள்ள ஐஸ்வர்யா லட்சுமிக்கு நடந்த மோசமான அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி விஷாலின் ஆக்ஷன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
தனுஷின் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கார்கி, சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
year ender 2022 : முறிந்தது தனுஷ் - ஐஸ்வர்யா 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை!

உச்சத்தில் ஐஸ்வர்யா லட்சுமி
இந்த ஆண்டு நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு யோகம் உச்சத்தில் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். தமிழில் கார்கி, பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி படங்களிலும் மலையாளத்தில் குமாரி மற்றும் தெலுங்கில் அம்மு உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

சமுத்திர குமாரி
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இரண்டாம் பாகத்திலும் முக்கிய காட்சிகளில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள கிங் ஆஃப் கோதா மற்றும் கிறிஸ்டோபர் படங்களிலும் நடித்து வருகிறார்.

கட்டா குஸ்தி வெற்றி
கடந்த வாரம் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் காமெடி கலக்கலாக வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. குஸ்தி வீராங்கனையாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமிக்கும் வாழ்வில் பேட் டச் சம்பவம் நடைபெற்றதாக அவர் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

தவறாக தொட்டார்
சினிமா சூட்டிங்கின் போது ஒரு நபர் தன்னை தவறாக தொட்டார் என்றும், உடனடியாக அவரை பிடித்து நாலு அடி விட்டேன். பெண்களுக்கு எப்போது இது போன்ற பிரச்சனைகள் முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், பெண்கள் அதற்காக பயந்து ஒதுங்க கூடாது. திருப்பி அடித்தால் தான் நம்மை தொடும் பயம் மோசமான ஆண்களின் மனதில் இருந்து நீங்கும் என பேசியுள்ளார்.

சிறு வயதில்
இப்போது என்னிடம் தப்பாக யாராவது நெருங்கினால் கூட புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறது. திருப்பிக் கொடுக்கும் தைரியமும் உள்ளது. ஆனால், சிறு வயதில் எனக்கும் பேட் டச் சம்பவங்கள் நடந்துள்ளன. அது போன்ற விஷயத்தை கார்கி உள்ளிட்ட படங்கள் பேசியிருப்பது சமூகத்திற்கு தேவையான கருத்து. குழந்தைகளை அவர்களுக்கு நெருக்கமானவர்களே தவறாக தொடுவது, கொடுமைப்படுத்துவது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கின்றன. இதை தடுக்க என்ன வழி இருக்கிறது என்று கூட தெரியவில்லை. ஆனால், பெண்கள் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவத்திற்கு வர வேண்டும், உடனடியாக பெற்றோர்களிடம் எதையும் மறைக்காமல் சொல்ல வேண்டும் எனக் கூறியுள்ளார்.