கட்டா குஸ்தி 2 வெற்றி.. நம்பவே முடியல.. ஆனந்த கண்ணீர் விடும் ஐஸ்வர்யா லட்சுமி

சென்னை: செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி 2. இதன் முதல் பாகம் மெகா ஹிட்டானதால் இதன் மீதும் எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருந்தது. தியேட்டரில் வெளியான படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சூப்பர் ரெஸ்பான்ஸ் கிடைத்த சூழலில்; இன்று படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

செல்லா அய்யாவு இயக்கிய கட்டா குஸ்தி திரைப்படம் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி சக்கைப்போடு போட்டது. ஹீரோயின் ஓரியன்டட் சப்ஜெக்ட்டாக உருவாகியிருந்த அப்படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் ஹீரோவாக நடித்ததற்காக விஷ்ணு விஷாலை பலரும் பாராட்டினார்கள். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இதனால் அதன் இரண்டாவது பாகத்தையும் இயக்குநர் உருவாக்கினார்.

Aishwarya Lekshmi Gets Emotional at Gatta Kusthi 2 Success Meet Thanks Child Star Sara
Photo Credit:

கட்டா குஸ்தி 2: அந்தவகையில் கட்டா குஸ்தி 2 திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு தியேட்டர்களில் வெளியானது. திரையரங்குகளுக்கு வரும் முன்னரே பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு காட்சியிலேயே படம் ஹிட்டாவதற்கான அத்தனை அறிகுறிகளும் தெரிந்தன. எதிர்பார்த்தபடியே தியேட்டருக்கு வந்த பிறகும் படம் மக்களிடம் சூப்பரான ரெஸ்பான்ஸை பெற்று கலக்கியது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் மெகா வரவேற்பை பெற்று; ஆறு நாட்களில் மொத்தம் 20 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருக்கிறது.

Also Read
வனிதா விஜயகுமார் வேற லெவல்.. சின்ன கேப் கிடைச்சாலும் விடவில்லையே.. என்ன ஆனது?
வனிதா விஜயகுமார் வேற லெவல்.. சின்ன கேப் கிடைச்சாலும் விடவில்லையே.. என்ன ஆனது?

கலக்கிய சாரா: இப்படத்திலும் ஐஸ்வர்யா லட்சுமியின் ஆக்‌ஷன் காட்சிகள் பட்டையை கிளப்பின. மேலும், சம்பவக்காரி பாடலில் அவருக்கும் விஷ்ணு விஷாலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரியும் சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருந்தது. இவை அனைத்துக்கும் மேலாக படத்தில் நடித்திருந்த குழந்தை நட்சத்திரமான சாராதான் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். வேல்ஸ் நிறுவன உரிமையாளர் ஐசரி கணேஷோ, கல்வியில் சாராவை தான் தத்து எடுத்துக்கொள்வதாகவும் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தெரிவிப்பு நிகழ்வு: ஆகமொத்தம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகிவிட்டது. இந்த வருடத்தின் இரண்டாவது பாதியின் தொடக்கமே வெற்றியோடு தொடங்கியிருக்கிறது. இதனால் திரைத்துறையினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். படம் வெற்றிகரமாக ஓடுவதைத் தொடர்ந்து இன்று படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். அப்போது இயக்குநர் செல்லா அய்யாவுக்கு பத்து சவரன் செயினை பரிசாக கொடுத்தார். இந்நிலையில், நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா லட்சுமியின் பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

ஐஸ்வர்யா பேச்சு: அவர் பேசுகையில், "ஒவ்வொரு நாளும் நான் இந்தப் படத்தின் ஷூட்டிங்கிற்கு செல்லும்போது; எங்களால் முடிந்த அளவு சிறந்ததை கொடுக்க வேண்டும் என்றுதான் கனவு காண்போம். இந்தப் படத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என ரசிகர்கள் ஒருபோதும் நினைத்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் உழைக்கிறோம். இப்படிப்பட்ட வெற்றி எப்போதாவது ஒருமுறைதான் கிடைக்கும்.

நம்பவே முடியவில்லை: படம் வெளியான ஐந்தாவது நாளிலேயே நாம் வெற்றி விழாவை கொண்டாடுகிறோம் என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை. அதேபோல் படத்தில் நடித்த சாராவுக்கு சிறப்பான நன்றி. இவ்வளவு உணர்வுப்பூர்வமான அனுபவத்தை நான் பெறுவேன் என்று நினைக்கவே இல்லை. அவர் என்னை ரொம்பவே நெகிழ்ச்சியடைய செய்துவிட்டார். நான் அழ ஆரம்பித்துவிட்டேன்" என கூறி ஆனந்த கண்ணீர் வடித்தார். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X