Thug Life: மணிரத்னம் என்ன பொன்னியின் செல்வன் 3 எடுக்கிறாரா?.. அந்த ஹீரோயினும் வந்துட்டாங்களே!

சென்னை: பொன்னியின் செல்வன் 1 மற்றும் 2 படங்களை இயக்கி ஒட்டுமொத்தமாக 800 கோடி வரை வசூல் ஈட்டி மிரட்டிய இயக்குநர் மணிரத்னம் அடுத்து கமல்ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் அடுத்தடுத்து பொன்னியின் செல்வன் நடிகர்களே களமிறங்கி வரும் நிலையில், ரசிகர்கள் இது என்ன பொன்னியின் செல்வன் 3ம் பாகமா? என்கிற கேள்வியை எழுப்பி உள்ளனர். புதிதாக இந்த படத்தில் எந்த நடிகை இணைந்துள்ளார் என பார்க்கலாம் வாங்க..

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க பலர் போராடியும் முடியாத சூழலில் டிராமா பாணியில் பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி முடித்து வசூலையும் தேற்றி விட்டார் மணிரத்னம். இந்நிலையில், அடுத்து கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் எனும் படத்தை உருவாக்க உள்ளார்.

Aishwarya Lekshmi joins Maniratnam and Kamal Haasans Thug Life movie

எச். வினோத் படம் என்ன ஆச்சு?: கமல்ஹாசன் அடுத்து எச். வினோத் படத்தை தான் இயக்கப் போகிறார் என கமல்ஹாசன் துப்பாக்கி சுடும் காட்சிகள் எல்லாம் வெளியானது. ஆனால், தற்போது அந்த படம் டிராப் செய்யப்பட உள்ளதாகவும் அடுத்து கமல்ஹாசன் மணிரத்னத்தின் தக் லைஃப் படத்தில் தான் நடிக்கப் போகிறார் என அந்த படத்தின் அறிவிப்புகளாக வெளியாகி வருகின்றன. துணிவு படத்திற்கு பிறகு அடுத்து கமல் படத்தை இயக்க ஒரு வருடமாக காத்திருந்த எச். வினோத் கதி என்ன என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

பொன்னியின் செல்வன் நடிகர்கள்: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள தக் லைஃப் படத்தில் திரிஷா, ஜெயம் ரவி உள்ளிட்டோர் இணைந்த நிலையில், ஐஸ்வர்யா ராய் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கப் போவதாக இன்னொரு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில், இன்னொரு பொன்னியின் செல்வன் நடிகை தற்போது இணைந்துள்ளார்.

Aishwarya Lekshmi joins Maniratnam and Kamal Haasans Thug Life movie

பூங்குழலி ஆஜர்: பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்த நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி தற்போது தக் லைஃப் படத்திலும் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும், மலையாள நடிகர்களான துல்கர் சல்மான், ஜோஜு ஜார்ஜ் மற்றும் கடல் படத்தில் நடித்த கெளதம் கார்த்திக் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X