Aishwarya Lekshmi: சினிமா தொழில் மீது மரியாதையே இல்லை.. ஐஸ்வர்யாவுக்கு பெற்றோர்கள் கொடுத்த ஷாக்!
சென்னை: டாக்டருக்கு படித்து விட்டு சினிமாவில் நடித்து வரும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் செயல் அவரது பெற்றோருக்கு மகிழ்ச்சியை அளிக்கவே இல்லை என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சினிமாவில் ஹீரோயின் ஆகிறேன் என பெண்கள் சொல்லும் போது, பெற்றோர்கள் பலரும் அது மிகவும் மோசமான துறை என்று தவிர்ப்பது வழக்கமாகி வருகிறது.
ஆனால், மகள்களின் விருப்பம் காரணமாக பல நடிகைகளின் பெற்றோர்கள் சினிமாவில் அவர்களை நடிக்க அனுமதித்து வருகின்றனர்.

பூங்குழலிக்கு இப்படியொரு சிக்கல்: விஷாலின் ஆக்ஷன் படம் மூலமாக தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா லக்ஷ்மி தனுஷ் உடன் ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக சாய் பல்லவி உடன் இணைந்து கார்கி, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாள நடிகையான ஐஸ்வர்யா லக்ஷ்மி தற்போது தென்னிந்திய மொழிகளில் அதிக கவனம் செலுத்தி நடித்து வரும் நிலையில், ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிகையாக மாறியது அவரது பெற்றோருக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.
மரியாதைக்குரிய தொழில் அல்ல: சினிமா என்றாலே கூத்தாடிகளின் தொழில் தான் என இன்றும் கேவலமாக நினைக்கும் பலர் உள்ளனர். ஆனால், அது ஒரு சிறந்த கலை என பார்ப்பவர்களால் தான் சினிமா இப்படியொரு பெரிய தொழிலாக உருவாகி நிற்கிறது.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மியின் பெற்றோர்களே சினிமா ஒரு மரியாதைக்குரிய தொழிலாக கருதவில்லை என சமீபத்திய பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மருத்துவம் படித்து விட்டு: அதற்கு காரணம் மருத்துவம் படித்து விட்டு மகள் டாக்டராக போகிறார் என நினைத்துக் கொண்டிருந்த பெற்றோருக்கு திடீரென மாடலிங்கில் இறங்கி மகள் நடிகையாக மாறிவிட்டாரே என்கிற வருத்தம் தான் என்கின்றனர்.
தினம் தினம் அந்த போராட்டத்தில் இருந்து மீண்டு வந்து தான் நடித்து வருவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி கூறியுள்ளது சினிமா துறையினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

பொன்னியின் செல்வனில் படு கிளாமராக: நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்த ஐஸ்வர்யா லக்ஷ்மி பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் படு கிளாமராக நடித்திருந்தார்.
அந்த படத்தைத் தொடர்ந்து அவருக்கு அதே போல கவர்ச்சியான கதாபாத்திரங்கள் குவிந்து வரும் நிலையில், பல படங்களை அவர் மறுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











