திருமணத்தில் விருப்பம் இல்லை..லிவ்-இன் ரிலேஷன்ஷிப் இருப்பதே நல்லது.. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி
சென்னை: நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, திருமணத்தின் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என்றும், திருமணம் செய்யாமல் இருக்கவே தான் விரும்புவதாகவும், தனது தனிப்பட்ட கருத்தை வெளிப்படையாக கூறி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும், தமிழில் ஜகமே தந்திரம், கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன், மாமன் போன்ற திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து ஐஸ்வர்யா லட்சுமி,
'கட்டா குஸ்தி 2', உட்பட பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் அவர் நடித்த 'ஆஷா' திரைப்படம் ரிலீஸ்க்க தயாராக உள்ளது. இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். ஜஃபர் சனல் இப்படத்தை இயக்கியுள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி: இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம் திருமணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஐஸ்வர்யா, என் 34 ஆண்டுகள் வாழ்க்கையில், பல திருமணங்களை நான் பார்த்து இருக்கிறேன். ஆனால், அவர்கள் அனைவரும் உண்மையாக மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் குறைவு தான். பலரின் வாழ்க்கையில் தனிப்பட்ட வளர்ச்சி இல்லை என எனக்குத் தோன்றுகிறது. இதனால், திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. இளம் வயதில் திருமணம் குறித்து பல கனவு கண்டேன், ஆனால், காலப்போக்கில் என் பார்வை மாறி, வாழ்க்கைக்கு திருமணம் அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன்.
நிம்மதி இல்லாத நிலை: எனக்குத் திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. வாழ்க்கைத்துணை வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், திருமண வாழ்க்கையில் இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அதனால், திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது.எனது இந்த நிலைப்பாடு காதலுக்கு எதிரானது அல்ல என்றும், சமூக அமைப்பாக இருக்கும் திருமண முறையைத்தான் தாம் ஏற்கவில்லை என்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி பேசி உள்ளார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











