சஞ்சய்லீலா பன்சாலி எங்கானும் கண்டால்..அம்மா சேலையில் அசத்தும் ஹீரோயின்.. அப்படி சொன்ன இயக்குனர்!

By

சென்னை: தனது அம்மாவின் சேலையை கட்டி, பிரபல நடிகை எடுத்துள்ள போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுந்தர். சி இயக்கத்தில் விஷால் நடித்த படம், ஆக்‌ஷன். இதில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தவர், மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி.

இப்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

மலையாளத்தில் நிவின் பாலி, டோவினோ தாமஸ், பகத் பாசில், ஆசிப் அலி ஆகிய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். இப்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, லால், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ஊரடங்கு

ஊரடங்கு

இதில் பூங்குழலி கேரக்டரில் அவர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக, படகு ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார், ஐஸ்வர்யா லட்சுமி. தாய்லாந்தில் நடந்த இதன் ஷூட்டிங்கில் பங்கேற்றார். கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுளளன. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளன. இந்தியாவிலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்மாவின் புடவை

அம்மாவின் புடவை

ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளதால், நடிகர், நடிகைகள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இதனால் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் எப்போதும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, இப்போது புதிய போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். தனது அம்மாவின் புடவையை அணிந்தபடி, அவர் எடுத்துள்ள போட்டோஷூட் புகைப்படம் இது.

Recommended Video

Ellu Vaya Pookalaye | Aishwarya Dutta Fantastic Try | Lock down Challenge
சஞ்சய்லீலா பன்சாலி

சஞ்சய்லீலா பன்சாலி

இந்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போட்டோவை கண்ட மலையாள இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப், இதை 'சஞ்சய் லீலா பன்சாலி எங்கானும் கண்டால் இப்போ பிடிச்சுக்கொண்டு போவும்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார். இவரைப் போல ஏராளமான திரை பிரலங்களும் அவரது போட்டோவுக்கு கமென்ட் போட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X