காட்டன் சேலையில் நச்சுன்னு வளைவு நெளிவை காட்டிய ஐஸ்வர்யா மேனன் ..!
சென்னை : ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
இப்பொழுது அசோக் செல்வன் உடன் இணைந்து வேழம் என்ற படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் ஜனனி ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள ரவிதேஜாவின் புதிய படத்தில் ஐஸ்வர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது காட்டன் சேலையில் வளைவு நெளிவுகள் நச்சுன்னு தெரிய வாயை பிளக்கும் புகைப்படங்களை பதிவிட தமிழ்நாட்டு பச்சைக்கிளி என ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

தமிழ் படம்
10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடிக்க பம்பரமாய் சுற்றி நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிஎஸ் அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படம் இரண்டாவது பாகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

நடிப்பு பாராட்டப்பட்டது.
இசையமைப்பதை தொடர்ந்து இப்பொழுது ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நிலையில் அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான நான் சிரித்தால் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது. இதில் ஐஸ்வர்யா மேனனின் நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது. டான்ஸிலும் பட்டையைக் கிளப்பி இருந்தார்.

காம்போ மீண்டும்
தெகிடி வெற்றிக்குப் பிறகு அசோக் செல்வன், ஜனனி காம்போ மீண்டும் வேழம் என்ற படத்தில் இணைய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது இப்பொழுது வேழம் படத்தில் மற்றுமொரு கதாநாயகியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்க உள்ளார்.

ரவிதேஜாவின் புதிய படத்தில்
2012 ஆம் ஆண்டே லவ் ஃபெயிலியர் என்ற படத்தில் நடித்து தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகம் செய்யப்பட்ட இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் ரவிதேஜாவின் புதிய திரைப் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்படத்தை திரிநாத் ராவ் நக்கின இயக்க உள்ளார். டைட்டில் இன்னும் வைக்கப்படவில்லை.
Recommended Video

தமிழ்நாட்டு பச்சைக்கிளி
கவர்ச்சி புகைப்படங்களால் சமூக வலைதளங்களை அல்லாட வைக்கும் ஐஸ்வர்யா இப்பொழுது காட்டன் சேலையில் வளைவு நெளிவு நச்சுனு தெரிய சூடேற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாகி வர இதைப்பார்த்த ரசிகர்கள் தமிழ்நாட்டு பச்சைக்கிளி என வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











