பாவாடை தாவணியில் கரும்பு போல தித்திக்கும் ஐஸ்வர்யா மேனன்!
சென்னை: ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயம் ஆனவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இப்போது நடித்து வருகிறார்
சமூக வலைதளங்களின் ஹாட் குயினாக வலம் வந்துகொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது பாவாடை தாவணியில் கட்டு கரும்பை போல தித்திக்கும் அழகிய புகைப்படங்களை இப்பொழுது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறுசிறு வேடங்களில்
தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த அழகிய மற்றும் திறமை வாய்ந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன் ஆரம்பத்தில் பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். குறிப்பாக சித்தார்த்தின் காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட படங்களில் இவர் நடித்துள்ளார். இந்தநிலையில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக வீரா என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு அந்த திரைப்படம் பெரிதளவு கைகொடுக்கவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக தமிழ் படம் 2ல் நடித்தார்.

நான் சிரித்தால்
இசை அமைப்பாளராக இருந்து இப்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்து பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதியின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அறிமுக இயக்குனர் ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த நான் சிரித்தால் படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

தெலுங்கிலிருந்து வாய்ப்புகள்
இந்த படத்தில் நடிப்பு நடனம் கவர்ச்சி என அனைத்திலும் ஆல்ரவுண்டர் காட்டிய ஐஸ்வர்யா மேனன் ரசிகர்கள் மத்தியிலும் தனி இடத்தை பிடித்தார் இப்பொழுது தமிழ் சினிமாவிலும் தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள இவருக்கு தெலுங்கிலிருந்து வாய்ப்புகள் குவிகிறது. அந்தவகையில் தெலுங்கில் இளம் நடிகராக உள்ள நிகில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
Recommended Video

பாவாடை தாவணியில் கரும்பை போல
இவ்வாறு தென்னிந்தியாவில் மிகப் பிரபலமான இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனன் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஹாட் குயினாக வலம் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் இப்போழுது பாவாடை தாவணியில் கட்டு கரும்பை போல தித்திக்கும் அழகிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











