செய்யலாமா வேண்டாமா.. ரசிகர்களிடம் அட்வைஸ் கேட்கும் பிரபல நடிகை!
சென்னை : ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு சென்ற ஆண்டு வெளியான நான் சிரித்தால் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து கலக்கியவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம்,மலையாளம் என பல மொழிகளில் நடித்து வருகிறார்.
அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் வேழம் திரைப்படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் ஐஸ்வர்யா இப்போது அதை பண்ணலாமா வேணாமா என ரசிகர்களிடம் அட்வைஸ் கேட்டுள்ளார்.

சிறு கதாபாத்திரத்தில்
குறும்படமாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று பின் திரைப்படமாக உருவான காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன் அதைத்தொடர்ந்து லவ் பெயிலியர்,ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு என பல படங்களில் நடித்து வந்தார்.

மிகப்பெரிய அறிமுகத்தை
தமிழில் கிருஷ்ணா நடிப்பில் வெளியான வீரா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பாராட்டுகளைப் பெற்ற இவர் அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஸ்பூஃப் மூவி என அழைக்கப்படும் மிர்சி சிவாவின் தமிழ் படம் 2 இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

மிகப் பெரிய வரவேற்பை
தென்னிந்தியாவின் ஹிப்ஹாப் ராஜா என அழைக்கப்படும் ஹிப் ஹாப் ஆதியின் வித்தியாசமான நடிப்பில் கலகலப்பான காமெடி கதைக்களத்தில் வெளியான நான் சிரித்தால் சென்ற ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியும் பெற்றது. இதில் ஐஸ்வர்யா மேனன் கதாபாத்திரம் அனைவரையும் பாராட்ட வைத்தது.

செய்யலாமா வேண்டாமா
சமூக வலைதளப் பக்கங்களை திறந்தாலே இவரது புகைப்படங்களை பார்க்காமல் இருக்க முடியாது அந்த அளவிற்கு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவின் ஹாட் குயினாக வலம் வரும் ஐஸ்வர்யா பிட்னஸில் மிகவும் கவனம் கொண்டவர். உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள இவர் ஓவர் சோம்பலாக இருப்பதால் உடற்பயிற்சி செய்யலாமா வேண்டாமா என ரசிகர்களிடம் அட்வைஸ் கேட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











