16 வயசுல இருந்து பிரபுவை லவ் பண்றேன்.. அது புனிதா அக்காக்கே தெரியும்.. ஐஸ்வர்யா பகீர்!

சென்னை: நடிகை ஐஸ்வர்யா பாஸ்கரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். அதிலும், குறிப்பாக பிரபு மீது அவருக்கு இருக்கும் காதல் பற்றி இவ்ளோ ஓபனாக பேசியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

பழம்பெரும் நடிகை லக்‌ஷ்மி மற்றும் பாஸ்கரன் தம்பதியினருக்கு மகளாக பிறந்தவர் தான் ஐஸ்வர்யா. தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் சிவகுமார் நடிப்பில் வெளியான நியாயங்கள் ஜெயிக்கட்டும் படத்தின் மூலம் கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்த ஐஸ்வர்யா திடீரென கவனிப்பு இன்றி கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி மீண்டும் சின்னத்திரை வாய்ப்புகளை அவருக்கு பெற்றுத்தந்தது.

Aishwarya opens up she loves Actor Prabhu more than anything

சூர்யா, கார்த்தியுடன் விளையாடுவேன்: சூர்யா என்றே சொல்ல மாட்டேன். சிறு வயதில் இருந்து இப்போ வரைக்கும் சரவணன் என்று தான் அழைப்பேன். சரவணன் மற்றும் கார்த்தி உடன் தான் அதிகம் விளையாடி இருக்கேன். சிவகுமார் சார் சினிமாவை பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக் கொடுத்துள்ளார் என்றார்.

பிரபு தான் என் லவ்வர்: 16 வயதில் இருந்தே பிரபுவை தான் காதலிக்கிறேன். இன்னமும் அவர் எனக்கு டார்லிங் தான். இந்த விஷயம் அவரது மனைவி புனிதா அக்காவுக்கே தெரியும் என பளிச்சென பேசியுள்ளார் ஐஸ்வர்யா. 1986ம் ஆண்டு வெளியான பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபுவின் நடிப்பை பார்த்து மெய் சிலிர்த்துப் போய் விட்டேன். அப்போதிருந்தே பிரபு மீது அளவுக்கடந்த காதல். சுயம்வரம் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு காரணமே பிரபுவுடன் ஜோடியாக நடிக்கப் போகிறோம் என்பதால் தான். விஷால் நடித்த ஆம்பள படத்தில் நடிக்கும் போதும் அவரை நல்லா சைட் அடித்தேன் என்றேன்.

Aishwarya opens up she loves Actor Prabhu more than anything


சின்ன வீடா போக கூட ரெடி: நடிகர் பிரபுவின் சின்ன வீடா கூட போக ரெடியென்றே அவரிடம் சொல்லியிருக்கேன். அவர் அந்த காலத்துல அப்படியொரு அழகா இருப்பாரு. அவர் நடிப்பை பார்த்தால் சினிமாவில் பல நடிகைகளுக்கும் ஒரு மாதிரி ஆகிவிடும் என்று ஏகப்பட்ட சீக்ரெட் கதைகளை வெளிப்படையாக பேசியுள்ளார் ஐஸ்வர்யா.

மிஸ் செய்த படங்கள்: தெலுங்கில் நடிக்க கமிட் ஆன நேரத்தில் எனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பு ரோஜா படத்தில் நடிக்க வேண்டியது. தேவையில்லாமல் என் பாட்டியால அதை தொலைத்து விட்டேன். அதே போல தளபதி படத்திலும் ஷோபனா நடித்த ரோலில் முதலில் என்னை நடிக்கத் தான் மணி சார் அழைத்தார். அந்த படத்தையும் மிஸ் செய்து விட்டேன் என தனது பேட்டியில் ஃபீல் பண்ணி பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X