நீங்க டைவர்ஸ்னு உருட்டுங்க.. நாங்க ஜாலியா இருக்கோம்.. ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் செய்த சூப்பர் விஷயம்

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு விவாகரத்து நடக்கவிருப்பதாக வதந்திகள் பரவி இடையில் நின்றது. இப்போது மீண்டும் அந்த வதந்தி பரவ ஆரம்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்,மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் முழுவதுமாக திரும்பியது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை குறுகிய காலத்திலேயே பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள்.

மோசமான ரிலேஷன்ஷிப்: ஆனால் கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பின் நாட்களில் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சல்மானை பிரிந்த அவர் அடுத்ததாக விவேக் ஓபராயை காதலித்தார். ஆனால் அந்தக் காதலும் பாதியிலேயே முடிந்துவிட்டது.

Aishwarya Rai and Abishek Bachchan Latest Goes Trending on social Media
Photo Credit:

அபிஷேக் பச்சனுடன் திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது.

திட்டவட்ட மறுப்பு: இதற்கிடையே அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்தார்கள். மேலும் இந்த விவாகரத்துக்கு காரணமே அபிஷேக்கின் தாய் ஜெயா பச்சன்தான் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. அதனை ஜெயாவும் மறுத்துவிட்டார். ஒருவழியாக இந்த வதந்தி பரவுவது நின்றுபோனது. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களாக மீண்டும் அந்தத் தகவல் பரவ தொடங்கியது.

ஜாலியான ஜோடி: இந்நிலையில் இரண்டு பேர் தொடர்பான வீடியோ ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது. அதாவது சமீபத்தில் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகிய மூன்று பேரும் குடும்பமாக வெளிநாடுக்கு ட்ரிப் சென்றிருந்தார்கள். ட்ரிப்பை முடித்துவிட்டு திரும்பிய அவர்களுடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி வீடியோ எடுத்துக்கொண்டார். அந்த வீடியோவை பார்த்த இரண்டு பேரின் ரசிகர்களும்; நாங்கள் மகிழ்ச்சியோடுதான் இருக்கிறோம் என்று அடிக்கடி நிரூபித்தாலும் டைவர்ஸ் வதந்தி பரவுவது நிற்கவில்லையே என்று கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X