விவாகரத்து வதந்தியை கிளப்பியவர்கள் கப் சிப்.. ஐஸ்வர்யா ராய் செஞ்சிருக்க விஷயத்தை பாருங்க

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும் அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாகவும்; அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என்றும் கடந்த சில மாதங்களாகவே ஒரு தகவல் ஓடியது. மேலும ஆராத்யாவின் பிறந்தநாளுக்கு அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவிக்காதது அந்தத் தகவலுக்கு மேலும் வலு கூட்டியது.

உலக அழகி ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர் படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்திக்கு சென்று தனது திறமையை காண்பித்ததால் அங்கு அவருக்கு வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன்படி பாலிவுட்டில் முன்னணி நடிகை என்ற இடத்தை பெற்றார் ஐஸ்வர்யா. அந்த சமயத்தில் சல்மான் கானை காதலித்தார். இருவரும் சில வருடங்கள் ஜோடியாக வலம் வந்துகொண்டிருந்தார்கள். ஆனால் சில பிரச்னைகள் காரணமாக அவர்களது காதல் பாதியில் முடிந்தது.

aishwarya rai abishek bachchan

அபிஷேக்குடன் திருமணம்: சல்மான் கானை பிரிந்த ஐஸ்வர்யா ராய் சில வருடங்கள் சிங்கிளாக இருந்துவிட்டு அபிஷேக் பச்சனை காதலித்தார். அபிஷேக் பச்சனைவிட ஐஸ்வர்யா ராய் வயதில் மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு பேருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்துவரும் ஐஸ்வர்யா ராய்; கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மீண்டும் ஜோடி: இதனையடுத்து தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மணிரத்னம் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும்; அதில் அபிஷேக் பச்சனும் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். சூழல் இப்படி இருக்க ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் இடையே பிரச்னை வெடித்துவிட்டது. அதன் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரியவிருக்கிறார்கள் என்று கூறப்பட்டது.

தூபம் போட்ட செயல்கள்: அந்தப் பேச்சுக்கு வலு சேர்க்கும் விதமாக ஆராத்யாவின் பிறந்தநாளுக்குக்கூட அமிதாப் பச்சன் வாழ்த்து தெரிவிக்கவில்லை. அதேபோல் அமிதாப் பச்சன் பிறந்தநாளுக்கு ரொம்பவே தாமதமாக ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்தார். இது ஒருபக்கம் இருக்க தங்களுக்குள் எந்தவிதமான பிரச்னையும் இல்லை என்று அபிஷேக் பச்சன் தொடர்ந்து விளக்கமளித்தார். ஆனாலும் இந்த விவாகரத்து பற்றிய பேச்சு ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இந்தப் பேச்சுக்கு பெரிய முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

ட்ரெண்டாகும் ஃபோட்டோ: அதாவது கடந்த சில காலமாகவே அபிஷேக்கும், ஐஸும் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார்கள். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் மும்பையில் ஒரு பார்ட்டி நடந்தது. அந்தப் பார்ட்டியில் இருவரும் கலந்துகொண்டார்கள். அவர்களுடன் ஐஸ்வர்யா ராயின் தாயும் கலந்துகொண்டார். அப்போது அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் எடுத்துக்கொண்ட செல்ஃபி ஃபோட்டோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் இனியும் விவாகரத்துனு கிளப்பிவிடாதீங்க ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X