»   »  5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்.. ஏக பாதுகாப்பு கெடுபிடி!

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பில் ஐஸ்வர்யா ராய்.. ஏக பாதுகாப்பு கெடுபிடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

5 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஏக பாதுகாவலர்களுடன் படப்பிடிப்புத் தளத்தில் கால் வைத்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யாராய், நடிகர் அபிஷேக்பச்சனை திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயான பிறகும், அவர் மீது ரசிகர்களுக்கு மோகம் குறையவில்லை.

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

5 ஆண்டுகளுக்குப் பிறகு...

குழந்தை பிறந்த பின், ஐஸ்வர்யாராய் சினிமாவை விட்டு கடந்த 5 வருடங்களாக ஒதுங்கி இருந்தார். 5 வருட இடைவெளிக்குப்பின், அவர் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

இர்பான் - ஷபானா

இர்பான் - ஷபானா

பிரபல இந்தி பட அதிபர் சஞ்சய் குப்தா தயாரிக்கும் படத்தின் மூலம் அவர் மறுபிரவேசம் செய்கிறார். ஐஸ்வர்யாராயுடன் இர்பான் கான், ஷபனா ஆஸ்மி ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

12 பாதுகாவலர்கள்

12 பாதுகாவலர்கள்

படப்பிடிப்புக்கு ஐஸ்வர்யாராய் தினமும் 12 பாதுகாவலர்களுடன் வருகிறாராம். அவர் வீட்டில் இருந்து புறப்படும் போதே பாதுகாவலர்களும் கூடவே படப்பிடிப்பு தளத்துக்குள்ளும் அவர்கள் வந்து விடுகிறார்கள். படப்பிடிப்பு இடைவேளை சமயங்களில் ஐஸ்வர்யாராய் சக நட்சத்திரங்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது, பாதுகாவலர்கள் அவரைச் சூழ்ந்து நிற்கிறார்களாம்.

ஏன் இத்தனை கெடுபிடி

ஏன் இத்தனை கெடுபிடி

இந்த அளவுக்கு ஐஸ்வர்யாராய்க்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பது ஏன்? என்று விசாரித்த போது, ரசிகர்கள் தொந்தரவைத் தவிர்க்கவே இத்தனை ஏற்பாடு என்று பதில் கிடைத்தது.

இந்த பாதுகாவலர்களுக்கான செலவு மட்டும் ரூ.40 லட்சம் ஆகிறதாம். இந்த செலவை யார் செய்கிறார்கள் தெரியும்.. அமிதாப் பச்சன் குடும்பத்தினர் அல்ல... ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்!

English summary
Aishwarya Rai made her re entry through Jazbaa and she attended the shooting with tight security.
Please Wait while comments are loading...