பழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்புக்கு வந்த ஐஸ்வர்யா ராய்

By Siva

Recommended Video

சோனம் கபூர் கல்யாணத்தில் குவிந்த பாலிவுட் பட்டாளம் - வீடியோ

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பழைய பகையை மறந்து சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான ஆனந்த் அஹுஜாவை நேற்று திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை மும்பையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.

வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

சோனம் கபூர் தன்னை ஆன்ட்டி என்று கூறியது, மேலும் தான் கேன்ஸ் திரைப்பட விழாவில் கண்ணை பறிக்கும் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டிருந்ததை விமர்சித்தது ஆகிய காரணங்களால் ஐஸ்வர்யா ராய் கோபத்தில் இருந்தார்.

அழைப்பு

அழைப்பு

பழைய பகையை மறந்து சோனம் கபூர் ஐஸ்வர்யா ராயை தனது திருமணத்திற்கு வருமாறு போன் செய்து அழைத்தார். ஆனால் ஐஸ்வர்யா ராய் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

அபிஷேக்

அபிஷேக்

திருமணத்திற்கு வராத ஐஸ்வர்யா ராய் வரவேற்பு நிகழ்ச்சிக்கு தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் வந்திருந்தார். சோனம் கபூரின் திருமணத்திற்கு அபிஷேக் பச்சன் தனது தந்தை, சகோதரியுடன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆலியா

ஆலியா

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபை பிரிந்த பிறகு நடிகர் ரன்பிர் கபூர் நடிகை ஆலியா பட்டை காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் சோனம் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ரன்பிர் ஆலியாவுடன் ஜோடியாக வந்தார்.

கவுரி

கவுரி

நடிகர் ஷாருக்கான் தனது மனைவி கவுரி கானுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணமக்களை வாழ்த்தினார். கவுரி மிகவும் அழகாக வந்திருந்தார்.

கத்ரீனா

கத்ரீனா

கத்ரீனா கைஃப் தனது தங்கை இசபெல் கைஃபுடன் வந்திருந்தார். முன்னதாக சங்கீத் நிகழ்ச்சிக்கும் கத்ரீனா இசபெல்லுடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா

மீரா

நடிகர் ஷாஹித் கபூர் தனது மனைவி மீரா ராஜ்புட்டுடன் வந்திருந்தார். கர்ப்பமாக இருக்கும் மீரா தனது வயிறு தெரியாதபடி உடை அணிந்திருந்தார்.

குஷி

குஷி

ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி, குஷி ஆகியோர் தங்களின் தந்தை போனி கபூருடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள்.

அக்ஷய்

அக்ஷய்

நடிகர் அக்ஷய் குமார் தனது மனைவி ட்விங்கிளுடன் வந்திருந்தார். திருமண நிகழ்ச்சிக்கு ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வந்த நிலையில் வரவேற்புக்கு ஏராளமானோர் வந்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X