பாப்பாவ ஸ்கூலுக்கு அனுப்பிட்டு திரும்பவும் நடிக்கப் போறாராம் ஐஸ்
மும்பை: மகள் ஆரத்யாவை பள்ளிக்கு அனுப்ப ஆரம்பித்து விட்டால், மீண்டும் பழைய படி தன் நடிப்பைத் தொடரலாம் என முடிவெடுத்துள்ளாராம் ஐஸ்.
ரசிகப் பெருமக்கள் ஐஸ்வர்யா ராயின் புதுப்படங்களைப் பார்த்து கிட்டத்தட்ட மூன்று வருடங்களாகப் போகிறது. கர்ப்பமானதிலிருந்து புதிய படம் ஒத்துக் கொள்வதைத் தவிர்த்தார் ஐஸ்.
இப்போது, அவரது மகள் ஆரத்யாவிற்கு இரண்டு வயதாகப் போகிறது. அடுத்ததாக அவளை பிளே ஸ்கூல் அனுப்ப திட்டமிட்டுள்ள ஐஸ், விரைவில் பழைய படி தனது திரையுலகப் பயணத்தைத் தொடரப் போகிறாராம்.

குண்டான ஐஸ்...
ஆரத்யாவைக் கர்ப்பமானது முதற்கொண்டு, சற்று பூசியமாதிரி காணப்பட்ட ஐஸ், இடையில் உண்மையிலேயே ‘இடை' எது எனக் குழம்பிப் போகும் அளவிற்கு குண்டானார்.

ஐஸ்வர்யா ராயா இது...
சமீபத்தில் கேன்ஸ் உட்பட பல திரை விழாக்களிலும் மற்றும் பல பொது விழாக்களிலும் தலை காட்டத் துவங்கிய ஐஸ்ஸைப் பார்த்து அனைவரும் கொஞ்சம் அதிர்ந்து தான் போனார்கள்.

திரை உலகப் பிரவேசம்...
ஆனால், தற்போது கடின உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் தனது உடலை பழைய படி வளைவு , நெளிவு, சுளிவாக மாற்றி வருகிறாராம் ஐஸ். அதன் பிண்ணனியில் மீண்டும் திரை உலகப் பிரவேசமே காரணமாக உள்ளதாம்.

ரகசிய பேச்சு வார்த்தை...
கரண் ஜோஹர் மற்ரும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தப் பட்டுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில், ஐஸ்ன் புதுப்பட அறிவிப்பு வரலாம் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்.

ஸ்கூலுக்கு போகும் ஆரத்யா...
கடந்த சில மாதமாக தான் பங்கு பெறும் விழாக்கள் அனைத்திற்கும் தனது மகள் ஆரத்யாவை உடன் அழைத்துச் சென்றார் ஐஸ். ஆனால், தற்போது மீண்டும் நடிக்க முடிவெடுத்துள்ளதால் ஆரத்யா பிளே ஸ்கூலுக்கு போகப் போகிறாராம்.

சரியான நேரம்...
ஆரத்யாவிற்கு தற்போது இரண்டு வயது பூர்த்தியாகப் போவதால், இதுவே தனது திரையுலக முறு பிரவேசத்திற்கு உகந்த தருணம் என எண்ணுகிறாராம் ஐஸ்.

கடவுளுக்கே தெரியும்...
ஐஸ் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளதால் 2 வயது ஆரத்யா பள்ளி செல்லப் போகிறாளா? அல்லது ஆரத்யா பள்ளி செல்ல இருப்பதால் ஐஸ் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டுள்ளாரா? என்பது கடவுளுக்கும், பச்சன் குடும்பத்திற்கும் மட்டுமே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications











