100 குழந்தைகளின் உதடு பிளவு சிகிச்சைக்கு ஐஸ்வர்யா ராய் நிதியுதவி
மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் பிளவு உதடுகள் உள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் உலக அழகி பட்டம் வென்று நேற்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை கொண்டாட முடிவு செய்தார் ஐஸ். மேலும் அவரது தந்தை கிருஷ்ணராஜ் ராயின் 76வது பிறந்தநாளையும் கொண்டாட திட்டமிட்டார்.
இரண்டையும் கொண்டாட அவர் ஸ்டார் ஹோட்டலுக்கு செல்லவில்லை மாறாக மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்றார்.

குழந்தைகள்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 முதல் 60 குழந்தைகளுடன் தனக்கு முக்கியமான நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

சிகிச்சை
ஐஸ்வர்யா தனது ஐஸ்வர்யா ராய் பவுன்டேஷன் மூலம் உதட்டு பிளவு கொண்ட 100 குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு நிதியுதவி செய்துள்ளார்.

வயது
ஐஸ்வர்யா நிதியுதவி செய்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் ஒன்று முதல் 14 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தந்தை
ஐஸ்வர்யா ராயின் தந்தை தனது 76வது பிறந்தநாளை இன்று கொண்டாடினார். முன்னதாக ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யாவின் 3வது பிறந்தநாளையொட்டி பாலிவுட் பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார்.


Click it and Unblock the Notifications











