குத்தாட்டம்... ''அதை அங்க போய்க் கேளுங்க''.. நிருபரிடம் பாய்ந்த ஐஸ்வர்யா ராய்
மூத்த நடிகைகள் எல்லாம் குத்தாட்டம் போடுகிறார்களே என்று தன்னைப் பார்த்துக் கேட்ட நிருபரிடம், கோபமாக பேசிய ஐஸ்வர்யா ராய்,அதை அவர்களிடம் போய்க் கேளுங்கள், என்னிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று பதிலளித்தார் ஐஸ்வர்யா ராய்.
சமீபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் சந்திப்பின்போதுதான் இப்படி கடுப்படித்துள்ளார் ஐஸ்வர்யா.
மாதுரி தீட்சித் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆடியதைத்தான் அந்த நிருபர் மறைமுகமாக ஐஸ்வர்யாவிடம் கேட்டார். ஆனால் அந்தக் கேள்வியை ஐஸ்வர்யா ரசிக்கவில்லை.

ராம்லீலா விவகாரம்
சஞ்சய் லீலாபன்சாலியின் ராம்லீலா படத்தில் குத்துப் பாட்டுக்கு ஐஸ்வர்யா ஆடுவார் என்று பேச்சு அடிபட்டு வந்தது.

இடையில் புகுந்த பிரியங்கா
ஆனால் இடையில் என்ன நடந்ததோ, பிரியங்கா சோப்ரா ஆடப்போவதாக தகவல்கள் கூறுகின்றன.

எரிச்சலான ஐஸ்வர்யா
இந்த நிலையில்தான் அந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது சம்பந்தப்பட்ட நிருபர்,ஐஸ்வர்யாவிடம் மூத்த நடிகைகள் குத்துப் பாட்டுக்கு ஆடுகிறார்களே என்றுகேட்டார்.

என்னை ஏன் கேட்கிறீர்கள்
அதற்கு பதிலளித்த ஐஸ்வர்யா, அதற்கு அவர்களைத்தான் நீங்கள் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள் என்று சற்றே எரிச்சல்கலந்த குரலில் கேட்டார்.


Click it and Unblock the Notifications











