என்னது ஐஸ்வர்யா ராய்க்கு 46 வயசாகுதா…. நம்பமுடியலையே

Recommended Video

Aishwarya Rai manager தீ விபத்தில் சிக்கினார்-வீடியோ

மும்பை: ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது 46ஆவது பிறந்த நாளை நவம்பர் 1ஆம் தேதி கொண்டாடவிருக்கிறார். இந்த பிறந்தநாள் கொண்டாட்டமாக அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவுடன் அழகிய இத்தாலிய நகரமான ரோம் நகரில் கொண்டாட இருக்கின்றனர்.

தீபாவளியை முன்னிட்டு ஜல்ஸாவில் உள்ள பச்சன் இல்லத்தில் தீபாவளி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்த பாலிவுட்டின் விருந்தில் மிகச்சிறந்த தொகுப்பாளினியாக பங்கேற்றார் ஐஸ்வர்யா ராய் பச்சன். அந்த விழாவில் பங்கேற்ற பிறகு மூவரும் ரோம் நகருக்கு புறப்பட்டனர்.

Aishwarya Rai celebrates her 46th birthday in Italy

இந்த ஒரு வார காலத்திற்கான விடுமுறை நாட்கள் கொண்டாட்டம் மற்றும் வணிகம் கலந்த ஒரு கலவை விடுமுறையாம். இத்தாலி தலைநகரில் சுவிஸ் வாட்ச் பிராண்ட் அஸோஸியேஷனின் 20ஆம் ஆண்டு கொண்டாட்டம் அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.

அவர்கள் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்காக ஒரு பிறந்த நாள் கொண்டாட்டத்தை அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யா உடன் இணைந்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த கண்காட்சி மற்றும் பிறந்த நாள் கொண்டாட்டம் இரட்டை கொண்டாட்டமாக இருக்கும்.

Aishwarya Rai celebrates her 46th birthday in Italy

அதனை தொடர்ந்து மூன்று நாட்கள் ரோம் நகரின் வாடிகன் சிட்டி முழுவதும் சுற்றிப் பார்க்க இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்யா ராய் பச்சன் பிறந்தநாள் மிக விமர்சையாக கொண்டாடப்படும். அப்போது, அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு ஏதாவது ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பார். சென்ற ஆண்டு மும்பையில் கொண்டாடிய பின்னர், மூவரும் கோவா சென்று கொண்டாடினர்.

ஐஸ்வர்யா ராய் பச்சன் பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் நடிக்க உள்ளார். மணிரத்தினம் இயக்கும் தமிழ் இலக்கிய படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் ஐஸ்வர்யா ராய் பச்சன். இந்த படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கப்படவிருக்கிறது. இதில் ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி என்ற மகள் கதாபாத்திரத்திலும், மந்தாகினி தேவி என்ற தாய் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார்.

Aishwarya Rai celebrates her 46th birthday in Italy

மறுபுறம் அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன் தயாரிப்பில் தி பிக் புல் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அனுராக் பாஸு இயக்கத்தில் பெயர் வெளியிடப்படாத மற்றுமொரு திரைப்படத்தில் வெவ்வேறு கதாபாத்திரத்தில் அபிஷேக் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

கணவன் மற்றும் மனைவி இருவரும் பிஸியாக இருக்கப்போவதால் இந்த ரோம் பயணம் அவர்களுக்கு ஒரு கொண்டாட்டம் நிறைந்த ஒரு விடுமுறையாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X