சல்மான் கானோடு நெருக்கமா?.. இப்படியா பேசுவது.. அருவருப்பாக இருக்கிறது.. ஐஸ்வர்யா ராய் வேதனை

மும்பை: இந்தியாவிலிருந்து உலக அழகி பட்டம் வென்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் எத்தனை பேர் அந்தப் பட்டத்தை பெற்றவர்களாக இருந்தாலும் ஐஸ்வர்யா ராய் எப்போதும் ஸ்பெஷல்தான். உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய்தான் இந்தியர்கள் மனதில் சட்டென்று தோன்றுவார். அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரம்பி இருக்கிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி இருக்கும் அவர்; இப்போது பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

உலக அழகி என்ற பட்டத்தின் மீது பல பெண்களுக்கு ஆசை உண்டு. அந்த ஆசையை இந்தியாவிலிருந்து சென்று நிறைவேற்றியவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஐஸ்வர்யா ராய்தான் முதன்மை இடத்தில் இருக்கிறார். உலக அழகி பட்டத்தை வென்ற பிறகு மணிரத்னம் இயக்கத்தில் இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் ஐஸ்வர்யா. அந்தப் படம் க்ளாசிக் படமாக இன்றுவரை கொண்டாடப்படுகிறது. ஐஸ்வர்யா ராயின் நடிப்பும் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது.

Aishwarya Rai Salman Khan Abishek Bachchan

ஹிந்தியில் பிஸி: தமிழில் அவர் அறிமுகமானாலும் தொடர்ந்து கோலிவுட்டில் நடிக்காமல் ஹிந்தி பக்கம் சென்றார். அங்கும் அவருக்கு பலமான வரவேற்பு கிடைத்தது. அங்கு முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி போட்டு நடித்துவந்த ஐஸ்; அவ்வப்போது தமிழிலும் நடிக்க மறக்கவில்லை. அப்படி அவர் நடித்த ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்தன. கடைசியாக அவர் தமிழில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.

அசால்ட் நந்தினி: பொன்னியின் செல்வன் நாவலில் நந்தினி என்ற கதாபாத்திரத்தை தனது கற்பனையிலிருந்து உருவாக்கியிருந்தார் எழுத்தாளர் கல்கி. அந்த கற்பனை கதாபாத்திரத்துக்கு படத்தில் உயிர் கூட்டியிருந்தார். நந்தினியாக ஐஸ்வர்யா ராய் கொடுத்திருந்த நடிப்பு அவரது கரியரில் தி பெஸ்ட்டாக இருக்கிறது என்று படம் வந்தபோது ரசிகர்கள் ஓபனாகவே பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம்: இதற்கிடையே பிக் பி என்று அழைக்கப்படும் அமிதாப்பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யார் ராய்க்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும்; அதனால் அவர்கள் விவாகரத்து பெறவிருக்கிறார்கள் என்றும் வதந்திகள் தொடர்ந்து பரவிவந்தன.

வதந்திக்கு முற்றுப்புள்ளி: ஆனால் அப்படி வதந்திகள் பரவியதை அடுத்து சில நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டு முற்றுப்புள்ளி வைத்தனர். சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்து முடிந்த ஆனந்த் அம்பானியின் திருமணத்திலும் குடும்பத்தோடு கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். அதேசமயம் அந்த திருமணத்தில் ஒரு புகைப்படம் பரவியது. அதாவது ஐஸ்வர்யா ராய் தனது முன்னாள் காதலர் சல்மான் கானோடு இருக்கும்படியான புகைப்படம் வெளியானது. ஆனால் அது போலியானது. மேலும் சல்மானோடு மீண்டும் ஐஸ்வர்யா நெருக்கம் காட்டுகிறார் என்றும் தகவல் பரப்பப்பட்டது.

பதிலடி தந்த ஐஸ்வர்யா ராய்: இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கும் ஐஸ்வர்யா ராய், 'அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. திருமணமான, ஒரு மகளுக்கு தாயான ஒரு பெண் குறித்து இப்படியா பேசுவது. புரளியை கிளப்பும் இந்த சமூகத்தில் அருவருப்பாக இருக்கிறது'' என்று குறிப்பிட்டிருக்கிறார். அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொள்வதற்கு முன்பு, சல்மான் கானும், ஐஸ்வர்யா ராயும் தீவிரமாக காதலித்ததும்; சில காரணங்களால் பிரிந்துவிட்டார்கள் என்பதும் நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X