என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்.. பிரச்னை இல்லை.. அதிரடி காட்டிய ஐஸ்வர்யா ராய்

மும்பை: ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக் பச்சனுக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை மிக சுமூகமாக நகர்த்திக்கொண்டிருக்கும் சூழலில் அவர்களுக்கு விவாகரத்து நடக்கவிருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன. ஆனால் அதனை திட்டவட்டமாக இரண்டு பேரும் மறுத்தார்கள். தற்போது தன்னை உருவ கேலி செய்தவர்களுகு தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஅய்

உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய்,மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். அதன் பிறகு தமிழிலிருந்து பாலிவுட்டுக்கு அவரது கவனம் முழுவதுமாக திரும்பியது. அங்கு தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை குறுகிய காலத்திலேயே பெற்றார். அப்படிப்பட்ட சமயத்தில் சல்மான் கானை காதலித்தார் ஐஸ்வர்யா. இருவரும் ஃபேமஸ் ஜோடிகளாக வலம்வந்து கொண்டிருந்தார்கள்.

டாக்சிக் ரிலேஷன்ஷிப்: ஆனால் கணிப்பு பொய்யாகி இரண்டு பேரும் பிரிந்தார்கள். அதற்கு முழு காரணம் சல்மான் கான் மட்டும்தான் என்று இன்றுவரை கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தான் ஒரு டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக பின் நாட்களில் ஐஸ்வர்யா ராய் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சல்மானை பிரிந்த அவர் அடுத்ததாக விவேக் ஓபராயை காதலித்தார். ஆனால் அந்தக் காதலும் பாதியிலேயே முடிந்துவிட்டது.

Aishwarya Rai gave Replies to body shamers here are details

அபிஷேக்குடன் திருமணம்: அதனையடுத்து அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை காதலித்து கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் இருக்கிறார். உச்சக்கட்ட காதலோடு தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். ஐஸ்வர்யா ராயும் திருமணத்துக்கு பிறகு சில காலம் கழித்து நடிக்க ஆரம்பித்தார். கடைசியாக அவரது நடிப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் சேர்ந்து நடிக்கவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

திட்டவட்ட மறுப்பு: இதற்கிடையே அவர்கள் இரண்டு பேருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக பேசப்பட்டது. ஆனால் அதனை இரண்டு பேருமே திட்டவட்டமாக மறுத்தார்கள். அதிலும் ஒரு பேட்டியில் பேசிய அபிஷேக் பச்சன், 'என்னையும் ஐஸ்வர்யா ராயையும் வைத்து இஷ்டத்துக்கு கதை எழுதிக்கொள்கிறார்கள்' என்று பதிலடி கொடுத்தார். அதேபோல் ஐஸ்வர்யா ராயும் தனது செயல்பாடுகள் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார்.

கேன்ஸ் திரைப்பட விழாவில்: சூழல் இப்படி இருக்க சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்டார். அப்போது நெற்றியில் குங்குமம் வைத்துக்கொண்டு வந்தார். அதேசமயம் அதிக உடல் எடையுடன் இருந்தார். இதன் காரணமாக அவரை ஒருசிலர் உருவ கேலி செய்தார்கள். இந்நிலையில் தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு அவர் தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், "என்னுடைய மகள் ஆராத்யா பிறந்த பிறகு எனது உடல் எடை கொஞ்சம் கூடியது.

உங்களுக்கு என்ன பிரச்னை: அதனால் பல சந்தர்ப்பங்களில் என்னை உருவ கேலி செய்தார்கள். ஆனால் நான் உடல் எடை கூடுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை என்று எனக்கு தெரியவில்லை. மகள் பிறந்த பிறகு நான் எடை கூடினேனா அல்லது உடலில் நீர் பிடித்ததா எனும் விஷயங்களை பற்றி தெரிந்துகொள்வதில் மற்றவர்களுக்கு அவ்வளவு ஆர்வம் ஏன் என்று தெரியவில்லை.என்னைவிட என் மீது உங்களுக்கு அக்கறை அதிகமா? எனது எடையால் எனக்கு எந்த பிரச்னையும் வரவே இல்லை. என்னை பற்றி யார் என்ன நினைத்துக்கொண்டாஅலும் என்ன பேசினாலும் எனக்கு பிரச்னை இல்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X