Aishwarya Rai - அபிஷேக் பச்சனை பிரிகிறாரா ஐஸ்வர்யா ராய்?.. தினமும் சண்டை.. ஐஸ்வர்யா சொன்னது நடந்துருச்சோ?
மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனை பிரியவிருப்பதாக பாலிவுட்டில் தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐஸ்வர்யா ராய் கடந்த 1994ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றார். அதற்கு பிறகு இருவர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் பாலிவுட்டில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். அறிமுகம் தமிழில் ஆனாலும் தனது கவனத்தை பாலிவுட் பக்கமே அதிகளவு செலுத்தினார். இதன் காரணமாக அவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருந்தன.

முன்னணி ஹீரோயின்: கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் தனது நடிப்பு திறமையை காண்பித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார். சல்மான் கான், அமீர் கான், ஷாருக்கான் என பல முன்னணி ஹீரோக்களுடன் வரிசையாக ஜோடி போட்டு நடித்தார். இதனால் ஐஸ்வர்யா ராய் இல்லாத ஹிந்தி சினிமா இல்லை என்ற நிலையும் இருந்தது.
தமிழில்: ஒருபக்கம் பாலிவுட்டில் பிஸியாக வலம் வந்துகொண்டிருந்த தமிழில் செலக்டிவ்வான படங்களிலேயே நடித்தார். ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் என நடித்த அவர் கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். நந்தினி கதாபாத்திரத்தை ஏற்றிருந்த அவர் அந்தக் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்து மிகச்சிறப்பாக நடித்திருந்தார்.
திருமணம்: இதற்கிடையே சல்மான் கானை காதலித்து வந்த அவர் சில காரணங்களால் அவரை பிரிந்து அபிஷேக் பச்சனை காதலிக்க தொடங்கினார். இருவருக்கும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். இந்த சூழலில் இருவரும் பிரியவிருப்பதாக பாலிவுட்டில் தகவல்கள் பரவ ஆரம்பித்திருக்கின்றன.
மோதிரம் இல்லை: அதாவது ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்ததிலிருந்து அவர் அணிந்த மோதிரம் இல்லாமல் அபிஷேக் பச்சன் பொதுவெளிக்கு வந்ததில்லை. சமீபத்தில் அவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அந்த மோதிரம் இல்லாமல் வந்தார். இதனைப் பார்த்த பலரும் அபிஷேக் கையில் மோதிரம் இல்லை எனவே அவருக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் சண்டையோ; பிரியப்போகிறார்களோ என்ற சந்தேகத்தை எழுப்பிவருகின்றனர்.
தினமும் சண்டை: முன்னதாக இருவரும் அளித்திருந்த பழைய பேட்டி ஒன்றில், நாங்கள் தினமும் சண்டை போட்டுக்கொள்கிறோம் என ஐஸ்வர்யா ராயும்; அது சண்டை இல்லை தினமும் எங்களுக்குள் கருத்து வேறுபாடு வருகிறது என்று அபிஷேக் பச்சனும் தெரிவித்திருந்தனர். அப்போது அதை பார்த்த ரசிகர்கள் எல்லா கணவன், மனைவிக்குள் வருவதுபோல்தான் என்று கூறினர். ஆனால் இப்போது இப்படி ஒரு தகவல் பரவிவருவதால் ஒருவேளை ஐஸ்வர்யா ராய் சொன்னதுபோல் இருவரும் தினமும் போட்ட சண்டை அவர்களை பிரிவுக்கு கொண்டுவந்துவிட்டதோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











