வயசாயிடுச்சா, எனக்கா?: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஜொலி ஜொலித்த ஐஸ்வர்யா ராய்
கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் சிவப்புக் கம்பளத்தில் ஒரு பட்டாம்பூச்சி போன்று ஜொலித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
கேன்ஸ் திரைப்பட விழா பிரான்ஸில் நடந்து வருகிறது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றுள்ளார்.
சிவப்புக் கம்பளத்தில் அவர் ஒய்யாரமாக நடந்து அனைவரையும் கவர்ந்துவிட்டார்.

ஐஸ்வர்யா
கேன்ஸ் திரைப்பட விழா சிவப்புக் கம்பளத்தில் ஐஸ்வர்யா ராய் பட்டாம்பூச்சி போன்ற உடை அணிந்து அழகாக நடந்தார். அவர் உடை அனைவரையும் கவர்ந்துவிட்டது.

முன்னோடி
ஃபேஷன் என்று வந்துவிட்டால் தான் முன்னோடி என்பதை ஐஸ்வர்யா ராய் நிரூபித்துவிட்டார். தனது உடல்வாகிற்கு எந்த உடை பொருந்தும் என்பதை புரிந்து கொண்டு அணிந்துள்ளார்.

ஆராத்யா
ஐஸ்வர்யாவின் மகள் ஆராத்யா சிவப்பு நிற கவுன் அணிந்து அழகாக இருந்தார். அவர் வெட்கப்பட்டுக் கொண்டே புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார்.

உடை
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அணிந்த சில உடைகள் நன்றாக இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கங்கனா
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் முதல் முறையாக கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவர் அழகு அழகான உடைகளில் அசத்திக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











