இந்தியன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவரா?.. மனீஷா கொய்ராலா இல்லையாம்.. செம காம்போ மிஸ்ஸிங்

சென்னை: கமல் ஹாசன் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டு தக் லைஃப் படத்தில் கமிட்டாகியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் காரணமாக படத்தின் ஷூட்டிங் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக அன்பறிவ் இயக்கத்திலும் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார். இப்படி வரிசையாக படங்கள் வைத்திருக்கும் கமல் ஹாசன் இந்தியன் 2 படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார். மேலும் இந்தியன் 3 படமும் வரவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் மனீஷா கொய்ராலாவுக்கு பதில் இன்னொரு நடிகைதான் நடிக்க வேண்டியதாக இருந்தது.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தவர். அந்தவகையில் அவர் இயக்கத்தில் கடந்த 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் இந்தியன். கமல் ஹாசன், மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. ஷங்கரின் கரியரில் மிக முக்கியமான படமாகவும் இந்தியன் அமைந்தது.

Aishwarya Rai is the First Choice to Act In Indian Movie

ரஜினிக்கு சென்ற கதை: முதலில் இந்தியன் திரைப்படத்தின் கதையை ரஜினிகாந்த்திடம்தான் சொன்னார் ஷங்கர். ரஜினியை மனதில் வைத்துதான் இந்தியன் படத்தின் ஹீரோ தனது நெற்றியில் விழும் முடியை ஒதுக்கும் மேனரிசத்தை யோசித்திருந்தார். ஆனால் ரஜினிகாந்த் சில காரணங்களால் அந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. பிறகு கமல் ஹாசன் உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்தாலும் ரஜினிக்காக யோசித்து வைத்திருந்த அந்த முடி ஒதுக்கும் மேனரிசத்தை கமல் ஹாசனை வைத்து செய்ய வைத்தார். அதுவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.

பக்கா ஆல்பம்: அந்தப் படத்தின் மேக்கிங், கேமரா, இசை என அத்தனையும் பக்காவாக இருந்தன. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசை அந்தப் படத்தின் வெற்றிக்கு மேலும் பலம் கூட்டியது. அதேபோல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய வசனங்களும் படத்துக்கு பெரிதாக உதவின. குறிப்பாக, 'வெளிநாட்டில் கடமையை மீறுவதற்கு லஞ்சம்; இங்குதான் கடமையை செய்வதற்கே லஞ்சம்" என்ற வசனம் நெற்றிப்பொட்டில் அடித்தது போல் இருக்கும். இப்படி எல்லா ஏரியாவிலும் படம் பக்காவாக இருந்ததால் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது.

இந்தியன் 2: இந்தியன் படத்தின் க்ளைமேக்ஸில் அதற்கான இரண்டாம் பாக லீடோடு முடித்திருந்தார் ஷங்கர். இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாகம் பல வருடங்களாகவே ஆரம்பிக்கப்படவில்லை. ஒருவழியாக சில வருடங்களுக்கு முன்பு படத்தின் வேலைகள் ஆரம்பித்தபோது ஏற்பட்ட விபத்தால் உயிரிழப்புகள் ஏற்பட படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு படத்தின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. கடந்த வருடம் இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் கமலுடன் சித்தார்த், காஜல், ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இந்தியன் ஹீரோயின்: இந்நிலையில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் மனீஷா கொய்ராலாவுக்கு பதிலாக இன்னொரு ஹீரோயினை நடிக்க வைக்க முயன்றாராம் ஷங்கர். அந்த ஹீரோயின் வேறு யாரும் இல்லை; முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்தான். ஐஸ்வர்யாவுக்கு இந்தியன் கதையும், தன்னுடைய ரோலும் பிடித்திருந்தாலும் அந்த சமயத்தில் ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்ததால் இந்தியன் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். பிறகு ஜீன்ஸ் படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்தார் ஐஸ்வர்யா ராய்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X