ரன்வீர்-தீபிகா திருமண வரவேற்பு: ஒன்றாக வந்த எலியும், பூனையும்
மும்பை: தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு இரண்டு பேர் ஒன்றாக வந்தது பாலிவுட்காரர்களை வியக்க வைத்துள்ளது.
பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து பெங்களூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதன் பிறகு மும்பையில் மீண்டும் ஒரு முறை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

திருமண வரவேற்பு
மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தீபிகா சிவப்பு நிற கவுனும், ரன்வீர் சிங் கோட், சூட்டும் அணிந்திருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு அவர்களை வாழ்த்தினார்கள்.

ஐஸ்வர்யா ராய்
ஐஸ்வர்யா ராய் தனது மாமனார் அபிதாப் பச்சன், மாமியார் ஜெயா, நாத்தனார் ஸ்வேதா நந்தாவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஐஸ்வர்யாவுக்கும், ஸ்வேதாவுக்கும் ஆகவே ஆகாது. இந்நிலையில் வெகு நாட்கள் கழித்து அவர்கள் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது தான் ஆச்சரியம்.

கரீனா
கரீனா கபூர் தனது கணவர் சயிப் அலி கானுடன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தார். கவுனில் கரீனா மிகவும் அழகாக இருந்தார். தைமூர் எங்கே கரீனா?

அனுஷ்கா சர்மா
நடிகை அனுஷ்கா சர்மா அழகான கவுனில் அம்சமாக வந்திருந்தார். அனுஷ்கா வர மாட்டார் என்று நினைத்தபோது வந்திருந்தார். காரணம் பாலிவுட்காரர்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரியும்.

ஜான்வி
ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் வழக்கம் போன்று அழகாக வந்திருந்தார். அவருடன் அவரின் தங்கை குஷி கருப்பு நிற கவுனில் மிகவும் அழகாக இருந்தார்.

தோனி
கிரிக்கெட் வீரர் தோனி, ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுத்திருந்தார்.


Click it and Unblock the Notifications











