கலாய்த்தால் பயந்துவிடுவேனா?: மறுபடியும் அதையே செய்த ஐஸ்வர்யா ராய்
மும்பை: ரசிகர்கள் கலாய்ப்பதற்கு எல்லாம் பயப்படும் ஆள் தான் இல்லை என்பதை நிரூபித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு தனது மகள் ஆராத்யா பச்சன் என்றால் உயிர். அவர் மகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்படி மகளுக்கு லிப் டூ லிப் கிஸ் கொடுத்தபோது எடுத்த புகைுப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார் ஐஸ்வர்யா.

நெட்டிசன்கள்
ஆராத்யாவுக்கு ஐஸ்வர்யாவ உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுத்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்தனர். மகளுக்கு இப்படியா முத்தம் கொடுப்பது. இந்த பிரபலங்களுக்கு இதே வேலையாப் போச்சு என்று ஐஸ்வர்யாவை கண்டமேனிக்கு பேசினார்கள்.

ஆராத்யா
ஃபேஷன் ஷோ ஒன்றில் கலந்து கொண்டு ஒய்யாரமாக ராம்ப் வாக் செய்தார் ஐஸ்வர்யா ராய். அந்த நிகழ்ச்சிக்கு அம்மாவை போன்றே உடை அணிந்து வந்திருந்தார் ஆராத்யா. பின்னர் ஐஸ்வர்யா தன் மகளுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை மீண்டும் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக வலைதளம்
நெட்டிசன்கள் கலாய்ப்பார்கள் என்பதற்காக தான் விரும்புவதை செய்யாமல் இருக்கும் ஆள் இல்லை ஐஸ்வர்யா ராய். ஐஸ்வர்யா மகளுடன் நேரம் செலவிட விரும்பி அதிக அளவில் படங்களை ஒப்புக் கொள்வது இல்லை. மேலும் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மகளையும் உடன் அழைத்துச் செல்கிறார் அவர்.

மகள்
ஐஸ்வர்யா தனது மகளுக்கு சுதந்திரம் அளிக்காமல் தன் கைப்பிடியிலேயே வைத்திருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. நேற்று பிறந்த நடிகை கரீனா கபூரின் மகன் தைமூர் கூட தனியாக நடக்கிறார். ஆனால் ஐஸ்வர்யாவோ ஆராத்யாவை இன்னும் கையை பிடித்துக் கொண்டே செல்கிறார். அதாவது சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் போன்று ஐஸ்வர்யா நடந்து கொள்வதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











