ஐஸ்வர்யா ராய்க்காக கேன்ஸில் மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு!

By Shankar

கேன்ஸ்: விமான தாமதம் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் புகழ்பெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டார் ஐஸ்வர்யா ராய்.

இதனால் அவருக்காகவே மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது சர்வதேச திரைப்பட விழாக் குழு.

Aishwarya Rai misses Cannes appearance

பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

கடந்த 13 வருடங்களாக அவர் கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்று வருகிறார்.

சிவப்புக் கம்பள வரவேற்பு

இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம்.

சிவப்பு கம்பளத்தில் அவர்கள் அழகாக நடந்து வருவதைக் காண ஏராளமான ரசிகர்களும் புகைப்படக்காரர்களும் காத்திருப்பார்கள்.

விமான தாமதம்

இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு நேற்று நடந்தது. ஆனால் இதில் ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை.

லண்டனிலிருந்து நைஸ் நகரத்திற்கு செல்லும் இணைப்பு விமானத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவரால் குறிப்பிட்டபடி கேன்ஸ் வந்துசேர முடியவில்லை.

அறிக்கை

இது குறித்து சர்வதேச திரைப்பட நிர்வாக மேலாளர் மனஷி குஹா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று நடந்த நிகழ்ச்சியில் துரதிருஷ்டவசமாக ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவருக்காக இந்நிகழ்ச்சியை வேறொரு நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

21-ம் தேதி

அதன்படி வரும் 21-ம் தேதி மீண்டும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக நடந்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X