தாய்லாந்தில் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் இணைந்தார் ஐஸ்வர்யா ராய்... எந்த கேரக்டரில் நடிக்கிறார்?

By

Recommended Video

Ponniyin Selvan Unnoticed Secrets | Ponniyin Selvan Title Design

சென்னை: தாய்லாந்தில் நடக்கும் பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில், நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்துள்ளார்.

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. விக்ரம், சரத்குமார், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, லால் உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான் லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது. இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பொங்கலுக்குப் பின் இந்த ஷூட்டிங்கில் அவர் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

கோயில்களில்

கோயில்களில்

இந்நிலையில், இந்தப் படத்துக்காக ஏராளமான கோயில்களில் ஷூட்டிங் நடத்த வேண்டும் என்றும் தமிழகத்தில் கோயில்களில் படப்பிடிப்பு நடத்த பர்மிஷன் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் தாய்லாந்தில் ஷூட்டிங் நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா ராய்

ஐஸ்வர்யா ராய்

இந்நிலையில், தாய்லாந்தில் நடந்து வரும் இந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடிகை ஐஸ்வர்யா ராய் இணைந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் அவர் இதன் படப்பிடிப்பில் இணைந்தார் என்றும் அவர் நடிக்கும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிகிறது.

நான்காவது முறை

நான்காவது முறை

இந்தப் படத்தோடு அவர் நான்காவது முறையாக, மணிரத்னத்தின் படத்தில் நடிக்கிறார். வேறு எந்த ஹீரோயினும் அவர் படத்தில் இத்தனை முறை ஹீரோயினாக நடித்ததில்லை. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய், நந்தினி கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X