ஐஸ்வர்யா ராயை கட்டியணைத்திருப்பது சில்க் ஸ்மிதாவா?.. அச்சச்சோ அது அவங்க இல்லை.. யாரு தெரியுமா?
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜீன்ஸ். பிரசாந்த், ஐஸ்வர்யா ராய், நாசர், செந்தில், ராதிகா, லட்சுமி, எஸ்.வி.சேகர், ராஜுசுந்தரம் என பலர் நடித்திருந்த அப்படம் க்ளாசிக் படமாக கொண்டாடப்படுகிறது. அந்தப் படத்தில் ஏழு அதிசயங்களை காட்சிப்படுத்தினார் ஷங்கர். இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ட்ரெண்டகியிருக்கின்றன.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்ற பெயர் எடுத்திருந்தவர் ஷங்கர். இப்போதைக்கு அந்தப் பெயர் ராஜமௌலிக்கு சென்றிருந்தாலும் ஷங்கர்தான் முதல் பிரமாண்டம் என்பது பலரும் சொல்வது. ஷங்கரின் பிரமாண்டம் முதன்முதலில் தென்பட்டதென்றால் அது ஜீன்ஸ் படத்தில்தான். கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இன்றுவரை பலராலும் ரசிக்கப்படும் படமாக இருக்கிறது.
ஷங்கர் டாப்: படத்தை ஷங்கர் அவ்வளவு அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். எளிமையான கதையை உணர்வுப்பூர்வமாகவும், ஸ்டைலிஷாகவும் ஒரே நேரத்தில் காண்பித்திருந்தார். படத்துக்கு அத்தனை விஷயங்களும் கைகூடி வந்ததன் காரணமாகத்தான் கோலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்றாக அது இன்றுவரை திகழ்ந்துகொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்பெஷல்: ஏ.ஆர்.ரஹ்மான் இசை கரியரில் ஜீன்ஸ் படத்துக்கு தனித்த இடம் உண்டு. கதைக்கு தேவையான இசையை கொடுத்து அப்ளாஸை அள்ளினார். முக்கியமாக பாடல்கள், பின்னணி இசை எல்லாம் காலத்துக்கும் அழியாது. அதுமட்டுமின்றி அந்தப் பாடல்களுக்கு வைரமுத்துவின் வரிகளும் உயிர் கொடுத்திருந்தன. இசை போலவே ஒளிப்பதிவிலும் அசோக் குமார் பட்டையை கிளப்பியிருந்தார்.
முதல் பிரமாண்டம்: இந்தப் படம்தான் ஷங்கருக்கு பிரமாண்ட இயக்குநர் என்ற பெயர் வர விதை போட்டது. ஒரு பாடலில் ஏழு அதிசயங்களை காட்சிப்படுத்தி அனைவரையும் வாய் பிளக்க வைத்தார். இது ஒருபக்கம் என்றால் மறுபக்கம் கிராஃபிக்ஸ் காட்சிகளை வைத்தே ஒரு பாடலை நகர்த்தியது என தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் அசரடித்திருந்தார்.
ட்ரெண்டாகும் ஃபோட்டோக்கள்: இந்நிலையில் ஜீன்ஸ் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் திடீரென ட்ரெண்டாகியிருக்கின்றன. அவற்றில் ஒன்றில் சில்க் ஸ்மிதா சாயலில் இருக்கும் பெண் ஐஸ்வர்யா ராயை அணைத்தபடி இருக்கிறார். அதனைப் பார்த்த ரசிகர்கள் ஐஸ்வர்யாவும், சில்க்கும் சந்தித்திருக்கிறார்களா ஒருவேளை சில்க் உயிரோடு இருந்தபோது படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கலாம் என்று பலவாறு பேசினார்கள்.

ஆனால் அந்தப் புகைப்படத்தில் இருப்பது சில்க் ஸ்மிதா இல்லை. அவர் பிரபல ஆடை வடிவமைப்பாளர் நீட்டா லுல்லா அவர். அவர்தான் ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் உள்ளிட்ட படங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனர். மேலும் ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் திருமணத்துக்கும் நீட்டா லுல்லாதான் காஸ்ட்யூம் டிசைனர். ஐஸ்வர்யா ராய் மட்டுமின்றி ஸ்ரீதேவி, ஷில்பா ஷெட்டி, இஷா கோபிகர் என பல பிரபலங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து கொடுத்திருக்கிறார்கள். திரைப்படங்க்ளை பொறுத்தவரை தேவ்தாஸ், மிஷன் காஷ்மீர் உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











