ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அடித்த ஜாக்பாட்
Recommended Video

சென்னை: ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நல்ல நேரம் ஆரம்பித்துவிட்டது.
செக்கச் சிவந்த வானம், வட சென்னை, கனா ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கோலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர்.
தனுஷின் வட சென்னை 2 படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

தெலுங்கு
ஐஸ்வர்யா ராஜேஷ் இரண்டு தமிழ் படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தலா 2 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சுசீந்திரனின் புதுப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

சிவகார்த்திகேயன்
எஸ்.கே. 16 படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்குமாறு ஐஸ்வர்யா ராஜேஷிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படத்தில் நடித்த ஐஸ்வர்யாவுக்கு தற்போது அவருக்கு ஜோடியாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மித்ரன்
சிவகார்த்திகேயனை வைத்து பி.எஸ். மித்ரன் இயக்கும் படத்திற்கு ஹீரோ என்று பெயர் வைத்து இன்று தான் பூஜை போட்டனர். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணி நடிக்கிறார்.

ஹீரோயின்கள்
நன்றாக தமிழ் பேசத் தெரிந்த ஹீரோயின்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று கூறி வந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷை தேடி பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன. கொடுத்த கதாபாத்திரமாகவே மாறிவிடுவதால் அவருக்கு பட வாய்ப்புகள் தானாக வருகின்றன.


Click it and Unblock the Notifications











