சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. காட்டில் செம மழைதான் போங்க

சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கடைசியாக டியர் திரைப்படம் வெளியானது. அடுத்ததாக கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட தமிழ் படங்களிலும் இரண்டு மலையாள படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா தற்போது கன்னட மொழியிலும் கால் பதிக்கவுள்ளார். கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

ஐஸ்வர்யா ராஜேஷ் கோலிவுட்டில் இப்போது டாப் 10 ஹீரோயின்கள் லிஸ்ட்டில் இருக்கிறார். சின்னத்திரையில் அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரைக்கு வந்த அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டவர். குடும்பமும் மிடில் கிளாஸ் குடும்பம்தான். ஒருவழியாக சினிமாவில் வாய்ப்பு பெற்று தன்னுடைய திறமையை நிரூபித்துவிட்டார். முக்கியமாக அவரது நடிப்பில் வெளியான காக்கா முட்டை திரைப்படம் அவரது கரியரில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது. ஏனெனில் வளர்ந்துவரும் சமயத்தில் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிக்க எந்த நடிகையும் யோசிப்பார். ஆனால் ஐஸ்வர்யா அப்படி நினைக்கவில்லை.

Aishwarya Rajesh Entry in Karnataka Cinema Here are the details

வடசென்னை: காக்கா முட்டை திரைப்படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தாலும் அடவர் எதிர்பார்த்தபடி அடுத்தடுத்து வாய்ப்புகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. அது தனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்ததாக அவரே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க சில படங்களில் தொடர்ந்து நடித்துக்கொண்டிருந்த அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. அதில் போல்டாக கெட்ட வார்த்தை எல்லாம் பேசி நடித்திருந்தார்.

ஹீரோயின் ஓரியண்ட்டட் சப்ஜெக்ட்: தமிழ் சினிமாவில் கடந்த சில காலமாகவே கதாநாயகிகளை மையப்படுத்தி படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அந்த ஜானருக்குள் சென்றிருக்கின்றனர். அவர்கள் வரிசையில் ஐஸ்வர்யா ராஜேஷும் இருக்கிறார். அவர் நடித்த சொப்பன சுந்தரி, டிரைவர் ஜமுனா உள்ளிட்ட படங்கள் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகவே அமைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் போதுமான வரவேற்பை பெறவிட்டாலும் ஐஸ்வர்யாவின் கதை தேர்வு பலரையும் ரசிக்க வைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் மட்டும் நடித்துவந்த அவர் புலிமாடா படத்தின் மூலம் மலையாளத்தில் எண்ட்ரி கொடுத்தார். கடைசியாக அவர் தமிழில் டியர் என்ற படத்தில் நடித்தார். அடுத்ததாக தமிழில் அவர் கறுப்பர் நகரம், மோகன் தாஸ், தீயவர் குலைகள் நடுங்க உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் அஜயண்டே ரண்டம் மோஷனம், ஹெர் ஆகிய படங்களிலும் கமிட்டாகியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படம்: இப்படி தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் பிஸியாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது கன்னட திரையுலகிலும் அடியெடுத்துவைத்திருக்கிறார். அதன்படி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக உத்தர்கண்டா என்ற படத்தில் நடிக்கிறார். அதுகுறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தமிழ், மலையாளத்தில் எப்படி அவர் கவனம் ஈர்த்தாரோ அதேபோல் கன்னட உலகிலும் கவனம் ஈர்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X